Foods To Avoid After 30 In Tamil
Women's Health and Fitness : பொதுவாகவே பெண்கள் மற்றவர்களை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு கூட தங்களை கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், 30 வயதிற்கு பிறகு ஆண் பெண் என இருவருக்கும் அவர்களது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது அவர்களது ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே 30 வயதிற்கு பிறகு அவர்கள் தங்களது ஆரோக்கியம் மட்டுமின்றி, உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
Foods To Avoid After 30 In Tamil
Women's Health and Fitness ; ஏனெனில் இந்த வயதில்தான் சர்க்கரை நோய், ரத்தசோகை, தைராய்டு இதய நோய் புற்றுநோய் என இதுபோன்ற பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இது தவிர மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் சருமத்தில் வயதான தோற்றம் தோன்ற ஆரம்பிக்கும் மேலும் அதை சரி செய்வது மிகவும் கடினம். எனவே முப்பது வயதிற்கு பிறகு பெண்கள் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும் அது என்னென்ன உணவுகள் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
Foods To Avoid After 30 In Tamil
Foods To Avoid After 30 : 30 வயதிற்கு பிறகு பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்:
இனிப்புகள்:
பொதுவாக அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. அது எந்த வயதிலும் கூட. அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு பிறகு பெண்கள் முடிந்தவரை இனிப்புகள் சாப்பிடுவது தவிர்ப்பது ரொம்பவே நல்லது. ஏனெனில் இந்த வயதிற்கு பிறகு தான் உடலில் வளர்ச்சிதை மாற்றம் படிப்படியாக குறையத் தொடங்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்சனைகள் பல மடங்கு அதிகரிக்கும். இது தவிர இந்த வயதிற்கு பிறகு அளவுக்கு அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டால் முகத்தில் பருக்கள் சுருக்கங்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Foods To Avoid After 30 In Tamil
Foods To Avoid After 30 : அதிகப்படியான உப்பு:
வயது கூட கூட உப்பு அதிகம் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக 30 வயதிற்கு பிறகு கண்டிப்பாக அதிகப்படியான உப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது. முடிந்தவரை குறைக்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில் உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்தால் ரத்த அழுத்தம் பிரச்சனையை அதிகரிக்கச் செய்யும். இது தவிர இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் தைராய்டு பிரச்சனையும் வரும்.
இதையும் படிங்க: பெண்களுக்கு அதிகம் தாக்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா?
Foods To Avoid After 30 In Tamil
Foods To Avoid After 30 : காஃபின்:
பெண்கள் 30 வயதிற்கு பிறகு அதிகப்படியான காபின் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காஃபினின் அதிகப்படியான நுகர்வு ஹார்மோன் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக மனசோர்வு, பதட்டம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் இது சருமத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்போனால் சீக்கிரமாகவே வயதான தோற்றம் காணப்படும். அதாவது இளம் வயதிலேயே தோல் சுருக்கம் மற்றும் நேத்து எனக்கு கோடுகள் சருமத்தில் காணப்படும்.
இதையும் படிங்க: பெண்களே; இந்த 4 டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க - 60 வயதானாலும் இளமையா பீல் பண்ணலாம்!
Foods To Avoid After 30 In Tamil
Foods To Avoid After 30 : பொரித்த உணவுகள்:
30 வயதிற்கு பிறகு பெண்கள் கண்டிப்பாக பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த வயதில் அளவுக்கு அதிகமான பொரித்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகரிகத்து, உடல் ஆரோக்கிய மோசமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் சரும பிரச்சனைகளும் வரும். இதற்கு பதிலாக வீட்டில் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுங்கள்.
Foods To Avoid After 30 In Tamil
Foods To Avoid After 30 : சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்:
30 வயதிற்கு பிறகு பெண்கள் வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இந்த வயதில் இவற்றை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும் இது தவிர பல நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். மேலும் வளர்ச்சிதை மாற்றமும் குறையும். இவற்றின் எதிர்மறையான தாக்கம் தோலில் நன்றாக தெரியும்.