குளிர்காலம் வந்துவிட்ட நிலையில், பலரும் தங்கள் விடுமுறையை அனுபவிக்க விரும்புகின்றனர். சிலர் சிம்லா மற்றும் மணாலி போன்ற அழகிய மலைவாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்களை பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் ஒரு பயணத்தில் நீங்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம். ஒரே ரயில் பயணத்தில் நீங்கள் 13 நாடுகளை பார்க்க முடியும். பாரீஸின் அழகை ஆராய்வதற்கும், சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபடுவதற்கும், ஸ்பெயினின் வசீகரத்தில் திளைப்பதற்கும், தாய்லாந்தின் கடற்கரைகளில் ஓய்வெடுப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இவை எல்லாம் 21 நாட்களில்.. உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
18,755 கிலோமீட்டர் தூரம் கொண்ட உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க 21 நாட்கள் ஆகும். போர்ச்சுகலின் அல்கார்வ் பகுதியில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளின் வழியாக பயணித்து இறுதியாக சிங்கப்பூரை சென்றடைகிறது. இடையே இந்த ரயில் 11 இடங்களில் நிற்கிறது. வானிலை இடையூறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த பயண நேரம் நீட்டிக்கப்படலாம்.
இந்த ரயில் பயணம், அழகான ஐரோப்பிய நாடுகளில் இருந்து சைபீரியாவின் பனிக்கட்டி நிலப்பரப்பு வரை பலவிதமான கலாச்சாரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை பயணிகள் கண்டுகளிக்க முடியும். மேலும் பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் பாங்காக் போன்ற நகரங்கள் முக்கிய நிறுத்தங்களில் ரயில் நின்று செல்வதால், இது பயணிகளுக்கு உலகின் மிகச் சிறந்த இடங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
நீண்ட ரயில் பயணம் பல நாடுகளை உள்ளடக்கிய போதிலும், இந்த ரயில் கட்டணம் மிகவும் மலிவான விலையில் இருக்கிறது என்பதே கூடுதல் சிறப்பு. டிக்கெட் விலை சுமார் 1,350 அமெரிக்க டாலர்கள், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,13,988 ஆகும்.
இந்த ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் போதும், உணவு அல்லது தங்குமிடம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அனைத்திற்கும் சேர்த்தே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் முழுவதும் உணவு, பானங்கள் மற்றும் வசதியான வாழ்க்கை ஏற்பாடுகள். இந்த அனைத்தையும் உள்ளடக்கிய சேவை கிடைக்கும். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நீங்கள் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளை இணைக்கும் போடன்-வியன்டியன் ரயில் பாதை சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், இந்த ரயில் பாதை சாத்தியமாகியுள்ளது. இந்த பாதை ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை ஒரே இரயில் பயணத்தில் பயணிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது, குறிப்பிடத்தக்க பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளை உள்ளடக்கியதால் பயணிகளுக்கு இது நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வானிலை நிலையைச் சரிபார்த்து, தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதை உறுதிசெய்து, இந்த ரயில் பயணத்தில் சீட் கிடைப்பதையும் உறுதிசெய்து, வெவ்வேறு ரயில்களுக்கு இடையே உள்ள இணைப்புகளைச் சரிபார்க்கவும். முறையான திட்டமிடல் இருந்தால், உங்களுக்கு உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தில் ஒரு மகிழ்ச்சியான பயண அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.