பீர் குடித்தால் ஆரோக்கியம்.. ஆனா இந்த 'அளவு' மீறக் கூடாது!! 

First Published | Nov 27, 2024, 4:13 PM IST

Beer Limit Per Week : பீர் குடிப்பது எவ்வாறு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என இந்தப் பதிவில் காணலாம். 

Beer Limit Per Week In Tamil

Beer Limit Per Week : மது அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பீர் குறிப்பிட்ட நாள்களில் அருந்துவதால் உடலுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பீர் அதிகமாக குடிக்கக் கூடாது. உடலில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்க அளவாக பீர் அருந்தவேண்டும். அது ஒரு வழக்கமான பழக்கமாக மாறிவிட்டால் தொல்லைதான். 

Beer Limit Per Week In Tamil

Beer Limit Per Week  : பீர் குடிப்பது குறித்து மக்களிடையே அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் முதல் மது பழக்கத்தை ஆரம்பிக்கும் பலரும் பீர் குடிக்க பழகி மற்ற மதுவகைகளை அருந்துபவராக இருக்கிறார்கள். இது உடலுக்கு தீங்கு செய்யும் செயல்பாடாகும். 

இதையும் படிங்க: உலகளவில் ட்ரெண்டாகி வரும் பீர் குளியல்., அப்படின்னா என்ன? இதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

Tap to resize

Beer Limit Per Week In Tamil

Beer Limit Per Week : பீர் என்ற பானம் தண்ணீர், ஹாப்ஸ், ஈஸ்ட், பார்லி போன்ற தானியங்களைப் புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆல்கஹால் அளவு (ABV) 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை உள்ளன. தேசிய சுகாதார சேவை (NHS) வரையறுத்துள்ள அளவின் படி, ஒரு யூனிட் என்றால் 10 மிலி அல்லது 8 கிராம் தூய ஆல்கஹாலின் அளவை குறிக்கும் என கூறுகிறது.  தேசிய சுகாதார சேவை பரிந்துரைத்த வரம்புகளின்படி, ஒரு வாரத்தில் 14 அலகுகளுக்கு மேல் ஒருவர் குடிக்கக் கூடாது. அதாவது ஒரு நாளில் 2 யூனிட்க்கு மேல் குடிக்கக் கூடாது. இது ஆண் பெண் பாலினத்தவருக்கும் பொருந்தும். 

Beer Limit Per Week In Tamil

Beer Limit Per Week  : ஒரு வாரத்தில் எவ்வளவு பீர் குடிக்கலாம்? 

வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் எந்த மதுவகையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பீர் குடிப்பவர்கள் ஒரு வாரத்தில் 14 யூனிட்களை மீறக் கூடாது.  வாரத்தில் சில நாட்கள் பீர் குடிக்காமல் இருக்க வேண்டும். பீர் குடிப்பது மிதமான பழக்கமாக இருந்தால் இதய நோய், எலும்புகள் தொடர்பான ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவை ஏற்படும் அபாயம் குறைய வாய்ப்புள்ளது. மிதமான மது அருந்துதல் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதனால்  மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்புகள் குறைகிறது.  

இதையும் படிங்க:  நீரிழிவு நோயாளிகள் பீர் குடிப்பதால் என்ன மாற்றம் நிகழும் தெரியுமா? 

Beer Limit Per Week In Tamil

Beer Side Effects : பீர் பக்க விளைவுகள்: 

மிதமான பீர் பழக்கம் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை தந்தாலும் அதிகமாக அருந்தினால் உடல்நலத்திற்கு பிரச்சினைகள் வரக் கூடும். மேலே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறி அதிகமாக பீர் அருந்துவது மோசமான  பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பு கூற்றுபடி, மிதமான ஆல்கஹால் பயன்பாடு கூட  புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். பீர் என்பது டையூரிடிக் பானம் ஆகும். இதனால் நீரிழப்பு ஏற்படும். தலைவலி, சோர்வு, வாய் வறட்சி ஆகிய அறிகுறிகளும் வரலாம். ஆரம்ப காலத்தில் பீர் உங்களுக்கு தூக்கத்தை கொடுத்தாலும், நாளடைவில் தூக்கக் கோளாறுகளை உண்டாக்கும். ஆகையால் வரம்பு மீறி மதுவை ஒருநாளும் பயன்படுத்த வேண்டாம்.

Latest Videos

click me!