முகப்பருக்கள் நீங்கி சருமம் பளபளக்க 'ஏலக்காய்' தண்ணீர்... எப்படி செய்யனும் தெரியுமா? 

Published : Nov 27, 2024, 01:52 PM IST

Cardamom Water For Skin : உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் ஏலக்காய் தண்ணீரின் தயாரிப்பு முறையையும், பலன்களையும் இங்கு காணலாம். 

PREV
15
முகப்பருக்கள் நீங்கி சருமம் பளபளக்க 'ஏலக்காய்' தண்ணீர்... எப்படி செய்யனும் தெரியுமா? 
Cardamom Water For Skin In Tamil

Cardamom Water Benefits : ஏலக்காய் நறுமண பொருள்களில் ஒன்று. உணவின் வாசனையை கூட்ட இனிப்புகள், அசைவ உணவுகளில் ஏலக்காயை சேர்ப்பார்கள். ஏலக்காய் இல்லாத இந்திய இனிப்பு வகைகள் குறைவுதான். மன அழுத்தத்தைக் குறைக்க தேநீரில் கூட ஏலக்காய் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. 

அழகான பளபளப்பான சருமத்தைப் பெற ஏலக்காய் தண்ணீர் உதவும். ஏலக்காயில் பல நல்ல பண்புகள் உள்ளன. இதனை தண்ணீரில் சேர்க்கும்போது உடலுக்கு பல்வேறு அதிசயங்களைச் செய்கிறது. குறிப்பாக சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்க ஏலக்காய் தண்ணீர் உதவுகிறது. அதை எவ்வாறு தயார் செய்வது என இங்கு காணலாம். 

25
Cardamom Water For Skin In Tamil

How To Make Cardamom Water : ஏலக்காய் தண்ணீர் எப்படி தயார் செய்வார்கள்? 

நன்கு பொடித்த 2 முதல் 3 பச்சை ஏலக்காய்களுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரை 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வேண்டும். பின்னர் வடிகட்டி  அதில் தேவைப்பட்டால் சில துளிகள் எலுமிச்சை சாறு அல்லது பேரிச்சம்பழம் சிரப் சேர்த்துக் கொள்ளலாம். 

ஏலக்காயை வெந்நீரில் ஊறவிட்டு தயாரிக்கும் புத்துணர்வு பானம் என்றே ஏலக்காய் தண்ணீரை கூறலாம். இந்த பானம் அருந்துவதால் உங்களுடைய செரிமானத்தை மேம்படும். இதனால் தோல் ஆரோக்கியமும் மெருகூட்டப்படுகிறது.

35
Cardamom Water For Skin In Tamil

Cardamom Water Benefits  : சரும பராமரிப்பு: 

ஏலக்காயில்  ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. அவை முகப்பருவை குறைக்கின்றன. வயதான தோற்றம் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றன. நாள்தோறும் ஏலக்காய் தண்ணீர் அருந்துவது உடலுக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கும். இதனால் பளபளப்பான ஜொலிக்கும் சருமம் கிடைக்கிறது. 

இதையும் படிங்க:  Cardamom Benefits: ஏலக்காய்; அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் அருமருந்து நரம்பு பிரச்சினை எட்டிக்கூட பார்க்காது!

45
Cardamom Water For Skin In Tamil

Cardamom Water Benefits  : உடலின் நச்சு நீக்கி! 

ஏலக்காய் தண்ணீர் உடலில் உள்ள நச்சுகளை வெகுவாக குறைக்கும். செரிமானத்தையும் ஊக்குவிப்பதால் உங்களுடைய வயிறு சுத்தமாகிவிடும். உடலில் நச்சுக்கள் நீங்குவது உங்களுக்கு பிரகாசமான தோற்றத்தை தரும். சருமத்தை உட்புறமாக நீரேற்றமாக வைத்திருக்கும். தோல் வறட்சியை குறைக்கும்.  முகத்தில் உள்ள வெடிப்புகள், சுருக்கங்கள் குறைந்து இளமையாகத் தோற்றமளிக்க ஏலக்காய் தண்ணீர் உதவும். 

இதையும் படிங்க:  டீயில் ஏலக்காய் சேர்க்கும் பழக்கம் இருக்கா? இந்த விஷயம் தெரிஞ்சா இனி விடமாட்டீங்க..!

55
Cardamom Water For Skin In Tamil

Cardamom Water Benefits  : வாய் துர்நாற்றம் நீங்கும்! 

வாய் ஆரோக்கியமும் மேம்படும். ஏலக்காய் தண்ணீர் உங்களுடைய வாயில் உள்ள நச்சுக்களை, பாக்டீரியாக்களை நீக்கிவிடும். இதனால் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.  ஈறு அழற்சி, பற்சிதைவு குறையும். ஏலக்காய் விதைகளில் காணப்படும் கலவைகளான சினியோல், டெர்பினைன், லிமோனென் உங்களுடைய வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும். சினியோல் கிருமி நாசினியாக செயல்படுவதால்  வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை முற்றிலும் நீக்கிவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories