உங்கள் குழந்தை சரியான விஷயங்களை பேச உதவும் '5' வழிகள்!!

First Published | Nov 27, 2024, 12:50 PM IST

Parenting Tips : குழந்தைகள் பொதுவாக பேசத் துவங்கும்போது அதிகமாக பேசுவார்கள். அவர்கள் சரியான விஷயங்களை பேச உதவும் 5 வழிகளைப் பார்க்கலாம்.

Parenting Tips

Over Talkative Children : எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது சில குழந்தைகள் அதிகமாகவே பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் சில குழந்தைகளோ எப்போதுமே அமைதியாக இருப்பார்கள். அவர்கள் அதிகமாக பேச விரும்ப மாட்டார்கள். குழந்தைகள் அதிகமாக அல்லது குறைவாக பேசுவது அது அவர்களின் ஆளுமைக்கு நல்லதல்ல.

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child : மேலும் குழந்தைகள் அதிகமாக பேசினால் எதிர்காலத்தில் அவர்கள் சில பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே அவர்கள் எந்த சிக்கலிலும் சிக்காமல் இருக்க குழந்தை பருவத்திலேயே சரி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் பேசுவதற்கான வரம்பை அவர்களிடம் சொல்லுங்கள். ஏனெனில், அதிகம் பேசக்கூடிய குழந்தைகள் தங்களுக்கு மட்டுமின்றி, சில சமயங்களில் பிறருக்கும் தொந்தரவு அல்லது சங்கடத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் உங்கள் குழந்தைக்கும் உங்களை தொந்தரவு செய்யும் இந்த பழக்கம் இருந்தால் நீங்கள் அதை படிப்படியாக மாற்ற வேண்டும். இதற்கு சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை பின்பற்றுங்கள்.

Tap to resize

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child  : அதிகமாக பேசும் குழந்தையை சமாளிக்க சில டிப்ஸ்:

குழந்தையிடம் பேசுங்கள்:

குழந்தை அதிகம் பேசும் குழந்தையாக இருந்தால் நீங்கள் முதலில் உங்கள் குழந்தையிடம் பேச வேண்டும். சில சமயங்களில் குழந்தையின் பேச்சை நீங்கள் கேட்கவில்லை என்றால் உங்களது கவனத்தை ஈர்ப்பதற்காக குழந்தைகள் அதிகமாக பேச தொடங்குவார்கள். எனவே உங்கள் குழந்தை என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் முதலில் கேளுங்கள்.

இதையும் படிங்க:  குழந்தையை குளிப்பாட்டும்போது இந்த '4' விஷயத்தை செய்ய மறக்காதீங்க!!

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child:

உங்கள் குழந்தை அதிகமாக பேசினால் அவரிடம் பேசுவதற்கான வரம்புகளை எடுத்துச் சொல்லுங்கள். யாரிடம் எவ்வளவு பேச வேண்டும் என்பதை முறையாக அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். குழந்தையின் பருவத்திலேயே இதை அவர்களிடம் சொன்னால் எதிர்காலத்தில் சிரமமாக இருக்காது.

இதையும் படிங்க:  குழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? எந்த வயதில் அப்படி செய்யலாம்?

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child:

உங்கள் குழந்தை அதிகமாக பேசினால் அவருக்கு ஒரு நாட்குறிப்பை கொடுத்து உங்கள் குழந்தை பேச நினைப்பதை அதில் எழுத சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் குழந்தை அதிகம் பேசும் பழக்கத்தை குறைத்துக் கொள்வார்கள். மேலும் நீங்கள் உங்கள் குழந்தையின் நாட்குறிப்பை படியுங்கள்.

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child: 

சில சமயங்களில் குழந்தைகள் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் விரிவாக சொல்ல தொடங்குவார்கள். அத்தகைய சூழ்நிலையில் அந்த விஷயத்தை முழுவதுமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் அவர்களுக்கு விளக்குங்கள். இவ்வாறு செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. மேலும் ஆரம்பத்திலேயே சிறு வாக்கியங்களை பேசுவதை பற்றி குழந்தைக்கு சொல்லிக் கொடுங்கள்.

Parenting Tips In Tamil

Ways To Handle An Over Talkative Child:

சில சமயங்களில் குழந்தைகளிடம் எதையாவது கேட்டால் அவர்கள் அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும் என்று குழந்தைக்கு எடுத்துச் சொல்லுங்கள். 

Latest Videos

click me!