Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : வாஷிங் மெஷினில் துணி துவைப்பது நம்முடைய வேலையை மிகவும் எளிதாக்குகிறது. மேலும் இதில் துணிகள் அனைத்தையும் நிமிடங்களில் துவைத்து விடலாம். ஆனால், வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது தெரியுமா? இல்லையெனில், துணிகளின் தரம் மற்றும் நிறம் கெட்டுவிடும்.
ஆனால், எந்தெந்த ஆடைகளை வாஷிங்மெஷினில் துவைக்க கூடாது என்று நம்மில் பலருக்கு தெரியாது.
எனவே, வாஷிங் மெஷினில் அப்படி எந்த மாதிரியான துணிகளை துவைக்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : வாஷிங் மிஷினில் எந்தெந்த துணிகளை துவைக்க கூடாது?
கம்பளி ஆடைகள் :
கம்பளி ஆடைகள் ரொம்பவே மென்மையானது என்பதால் அவற்றை ஒருபோதும் வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதமடையக் கூடும். எனவே அவற்றை கைகளால் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.
Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : சிப்பி முத்து ஆடைகள் :
வாஷிங் மெஷினில் சிப்பி மற்றும் முத்துக்கள் பதித்த ஆடைகளை துவைக்க கூடாது. அவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது அவைகள் உடைந்து, ஆடையில் நூல் நூலாக வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வாஷிங்மெஷினும் பழுதடைந்து விடும்.
இதையும் படிங்க: ஒரு பைசா செலவு கிடையாது.. இந்த '2' பொருள்கள் வாஷிங் மிஷினை பளீச்னு மாற்றிடும்!!
Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : ரெயின்கோட் :
ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் என்பதால் அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் ரெயின் கோட் பலூன் போல் விரிவடைந்து விடும். அதுமட்டுமின்றி ரெயின் கோட் கிழிந்து விடும். இது தவிர வாஷிங் மெஷின் பழுதடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : ஆடம்பரமான ப்ரா:
வாஷிங் மெஷினில் மிக விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் சருகை அல்லது பேக் செய்யப்பட்ட ப்ராக்களை ஒருபோதும் துவைக்க கூடாது. அதுவும் குறிப்பாக, அண்டர்வயருடன் இருக்கும் ப்ராவை துவைக்கவே கூடாது. இல்லையெனில் அவை கிழிந்துவிடும்.
Washing Machine Tips In Tamil
What Not To Wash In Washing Machine : ஜரிகை ஆடைகள் :
ஜரிகை அடுக்குகள் மென்மையானது என்பதால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதம் அடைந்துவிடும். எனவே அவற்றை கைகளால் துவைப்பது தான் நல்லது.