உங்க வயசுக்கு தினமும் 'எத்தனை' நிமிடங்கள் நடக்கனும் தெரியுமா?

First Published | Nov 27, 2024, 8:37 AM IST

Age Wise Walking Tips : ஒவ்வொருவரும் உடலை கட்டுக்கோப்பாக வைக்க தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். ஆனால் வயதிற்கு ஏற்ப எத்தனை நிமிடங்கள் நடக்க வேண்டும் தெரியுமா? இது குறித்து இங்கு பார்க்கலாம்.

Age Wise Walking Tips In Tamil

Walking Tips : தற்போது நாம் அனைவரும் பிஸியான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதால், ஆரோக்கியமாக இருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நேரமின்மையால் நம்மில் பலர் தங்களது வாழ்க்கை முறையை அதிகம் கவனிக்க முடியாமல் போகிறது. 

நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் ஆரோக்கியமாக இருக்க தினமும் நடைபயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10,000 படிகள் நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடலும் ஆரோக்கியமாக பராமரிக்கப்படும். ஆனால், வயதிற்கு ஏற்ப எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உடல் நலத்திற்கு நல்லது என்று தெரியுமா? இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : வயதிற்கு ஏற்ப எத்தனை நிமிடங்கள் நடக்க வேண்டும்?

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் :

நீங்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க விரும்பினால் மற்றும் உங்களது வயது 18 முதல் 30 வயது வரை இருந்தால் நீங்கள் தினமும் குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் வரை கண்டிப்பாக நடக்க வேண்டும். ஏனெனில் இந்த வயதில்தான் எடையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் 30 முதல் 60 நிமிடங்கள் நடந்தால் அது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் இந்த நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம். இது தவிர, மன அழுத்தம் நீக்கும் மற்றும் பல கடுமையான நோய்கள் வருவது தடுக்கப்படும்.

Tap to resize

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : 31 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் :

உங்களது வயது 31 முதல் 50 வயது வரை இருந்தால் நீங்கள் தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வரை கண்டிப்பாக நடக்க வேண்டும். தினமும் நடப்பயிற்சி செய்வது பல கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

இதையும் படிங்க:  தினமும் நடைப்பயிற்சி செய்வதால் முதுகு வலி குணமாகுமா? ஆய்வு சொல்வது என்ன?

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : 51 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் :

வயது அதிகரிக்கும் போது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பெரிய சவாலான காரியம். அதுவும் குறிப்பாக, 51 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். மேலும் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். எனவே இந்த வயது உள்ளவர்கள் தினமும் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை கண்டிப்பாக நடக்க வேண்டும்.

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : 66 முதல் 75 வயது வரை உள்ளவர்கள் :

பொதுவாகவே இந்த வயது உள்ளவர்கள் சில சிரமங்களை எதிர்கொள்வார்கள். மேலும் இந்த வயது உள்ளவர்களால் அதிகம் நடக்க முடியாது. இந்த காரணத்திற்காக 66 முதல் 75 வயது உள்ளவர்கள் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடப்பது போதுமானது. இப்படி நடப்பது பல கடுமையான நோய்களைத் தவிர்க்க உதவும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் மாலை நடைபயிற்சி... இந்த '1' ட்ரிக் ஃபாலோ பண்ணா முழுபலன்!! 

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் :

நீங்கள் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும். இந்த வயது உள்ளவர்கள் குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டும். இப்படி நடப்பது மூலம் உங்களது மனநிலை மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு ரொம்பவே நல்லது. 

Age Wise Walking Tips In Tamil

Walking Minutes By Age : குறிப்பு : நிபுணர்களின் கூற்றுப்பாடி தினமும் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நடைப்பயிற்சி உடல் எடையை கட்டுக்குள் வைக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக வைக்க உதவும். முக்கியமாக தினமும் நடைபயிற்சி செய்தால் பல நோய்கள் விலகி நிற்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலுவலகத்திற்கு சென்றால் லிப்ட்டில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டில் ஏறி செல்லுங்கள். அதுபோல அலுவலக வளாகத்தில் அவ்வப்போது நடங்கள். இதன் மூலம் உங்களது தினசரி நடைபயிற்சியை நிறைவேற்றலாம்.

Latest Videos

click me!