Nervous System Boosting Foods : தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு கூட நரம்பு மண்டலத்தில் பிரச்சினைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. முன்பு வயதானவர்களுக்கு தான் நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். நரம்பு சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு கைகளில் நடுக்கம், சோர்வு, தலைவலி, நரம்புகள் இழுப்பது மாதிரியான உணர்வு ஆகிவை ஏற்படும். இந்த பிரச்சனைகளை தடுக்க சில உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும். எந்தெந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்புசார்ந்த பிரச்சினைகளிலிருந்து தள்ளி இருக்க முடியும் என்பது குறித்து இங்கு காணலாம்.
28
Foods For Nervous System In Tamil
Pirandai For Nervous System : பிரண்டை
பிரண்டை நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடியது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த பிரண்டையை உணவில் சேர்ப்பது பலனளிக்கும். வாரத்தில் இரண்டு தடவை பிரண்டை சமைத்து சாப்பிடுவதால் நரம்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்ப முடியும். பிரண்டையை தொவையல் அல்லது சட்னியாக செய்து உண்ணலாம். நரம்பு பிரச்சனைக்கு மட்டுமின்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மருத்துவரிடம் கேட்ட பின்னரே சுகர் நோயாளிகள் உண்ண வேண்டும். கர்ப்பிணிகளும் மருத்துவ பரிந்துரையின்றி சாப்பிடக் கூடாது.
38
Foods For Nervous System In Tamil
Fig Fruit For Nervous System : அத்திப்பழம்:
அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் சருமம் பளபளப்பாக இருக்கும் இது வயதான தோற்றத்தை தடுக்க உதவும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் அத்திப்பழம் நல்லது நாள்தோறும் இரண்டு அத்திப்பழங்களை ஒன்பது நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஏற்கனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வர அத்தி பழங்கள் உதவும்.
உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் மாதுளை பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய நரம்பு மண்டலம் வலுப்பெற மாதுளம் பழம் அடிக்கடி உண்ணலாம். இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி உடலில் உள்ள சூட்டையும் குறைக்கும் என கூறப்படுகிறது. மாதுளையில் உள்ள பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
வெற்றிலையை பச்சையாக மென்று உண்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இவை செரிமானத்திற்கு உதவும். வாய் துர்நாற்றத்தை குறைக்க பயன்படுகிறது. நாள்தோறும் வெற்றிலை உண்பதால் வளர்சிதை மாற்ற செயல்பாடு தூண்டப்படும். வெற்றிலையை சாப்பிடுவதால் நரம்பு சார்ந்த பிரச்சினைகளும் குறைகின்றன.
68
Foods For Nervous System In Tamil
Amla For Nervous System : நெல்லிக்காய்:
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் 'சி' சத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. நாள்தோறும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரும் அபாயம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
78
Foods For Nervous System In Tamil
Dates For Nervous System : பேரிச்சம்பழம்:
பாலில் செயற்கை சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக பேரிச்சம்பழம் சேர்த்து அருந்தினால் உடல் வலிமையாக தேவையான சத்துக்கள் கிடைக்கும். அடிக்கடி இப்படி குடிப்பதால் உடல் வலுப்பெறத் தொடங்கும். உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இப்படி அருந்தினால் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் நரம்பு மண்டலமும் வலுப்பெறும்.
88
Foods For Nervous System In Tamil
Murungai Keerai For Nervous System : முருங்கைக்கீரை:
முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றை அடிக்கடி உண்ணும்போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு நரம்புகளும் பலப்படுகின்றன. வாரத்தில் மூன்று தடவை முருங்கைக்கீரை உண்பவர்களுக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறைகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.