Copper Bottle Water Side Effects In Tamil
Copper Vessel : செம்பு பாட்டில்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. இதில் தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியம் என சொல்லப்படுகிறது. செம்பு பாட்டில்களில் தண்ணீர் அருந்துவதால் செரிமானம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சொல்வதாக தகவல்கள் பரவுகின்றன. ஆனாலும் செம்பு பாட்டில்களில் தண்ணீர் அருந்தும் முன் நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Vessel Water : செம்பு உலோகத்தின் தன்மை:
செம்பு என்ற கனஉலோகத்தின் வேதியியல் பெயர் குப்ரஸ்/காப்பர் ஆகும். இதனை தாமிரம் என்றும் சொல்வார்கள். இந்த உலோகம் ஆற்றல் வாய்ந்தது. நம்முடைய உடலுக்கு மிகச்சிறிய அளவில் தாமிரம் தேவைப்படுகிறது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தான் இந்தியாவில் செப்பு குடங்கள், குவளைகளில் தண்ணீர் அருந்தும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குடங்களை முறையாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
அண்மையில் இளம்பெண் ஒருவர் செப்பு குடத்தில் இருந்த தண்ணீரை சூடு செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்திய பின் தாமிர நச்சுத்தன்மையை ஏற்பட்டதாக பகிர்ந்து கொண்டார். இதற்கு சில காரணங்கள் உள்ளன. செப்பு குடங்கள் அல்லது பாட்டிலில் உள்ள தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பக்கவிளைவுகளையே உண்டாக்கும். இந்த குடங்களில் உள்ள நீரை சூடு செய்து குடிப்பதும் தவறு. இதனால் வயிற்று கோளாறுகள் உண்டாகலாம்.
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Bottle Water Side Effects : செப்பு பாட்டில்களால் உண்டாகும் பாதிப்புகள்?
நம் உடலுக்கு தாமிரத்தின் பங்கு அவசியம். இதனால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும். நோயெதிர்ப்பு மண்டலம் செயல்பாடும் மேம்பாடு அடையும். நரம்பு செல்கள் இயக்கம் நன்றாக உள்ளது. ஆனால் நம் உடலுக்கு கொஞ்சம் தான் தாமிரம் தேவை. அந்த அளவை மீறும்போது உடலின் சமநிலை பாதித்து உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். நீங்கள் செப்பு பாட்டிலில் தண்ணீர் அருந்தினால் உடலில் தாமிரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உண்மையில் செம்பு தாதுக்கள் குறைபாட்டால் பெரியளவில் நோய் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதையும் படிங்க: எச்சரிக்கை: மறந்தும் கூட இந்த பானங்களை செப்பு பாத்திரத்தில் குடிக்காதீங்க..!! விளைவுகள் பயங்கரம்..!!
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Bottle Water Side Effects : ஆனால் அதிகப்படியான செம்பு உட்கொள்ளல் உடலில் நச்சுத்தன்மையை அதிகமாக்கும். இதனால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் சார்ந்த உடல்நல பிரச்சினைகள் வரலாம். சிலருக்கு தொடர்ச்சியான பயன்பாட்டால் கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள் கூட வரலாம். இந்த நச்சுத்தன்மைக்கு அந்த பாட்டில்களை சரியாக பயன்படுத்தாதது தான் காரணமாக இருக்கும். பாட்டிலை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள் பெருகும். ரொம்ப நேரம் செப்பு பாட்டிலில் தண்ணீர் சேமித்து வைப்பதால் தாமிர அயனிகளை திரவமாக வெளியிடுவது தூண்டப்படும். இதனால் பாதிப்பு வரலாம்.
இதையும் படிங்க: செம்பு பாத்திரம் பளபளக்க இந்த பொருட்களே போதும்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Bottle Water Side Effects : அறிகுறிகள்:
1). வயிற்றுப் பிடிப்புகள்
2). குமட்டல்
3). வாயில் உலோக சுவை போன்ற அறிகுறிகள் ஆரம்பகாலத்தில் வரும்.
கடுமையான அறிகுறிகள்:
மோசமான பாதிப்பு ஏற்பட்டால் கல்லீரல் பாதித்து மஞ்சள் காமாலை வரக் கூடும். வயிற்று வலி, தொடர்ச்சியான தலைவலி இந்த அறிகுறிகளில் அடங்கும். இதில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Bottle Water Side Effects : செப்பு பாட்டில்களின் விஷத்தை எப்படி தவிர்க்கலாம்?
நீங்கள் செப்பு பாட்டில் பயன்படுத்தினால் நல்ல பாட்டிலை தேர்ந்தெடுங்கள். அதனுடைய தரம் முக்கியம். செப்பு உலோகத்திற்கும் நீருக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாமல் தடுக்கப்பட்ட பாட்டில்களைத் தேர்ந்தெடுங்கள். அதை சுத்தம் செய்யும் போது சுத்தமான துணியை பயன்படுத்துங்கள். தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
செப்பு பாட்டிலை கழுவாமல் நீண்ட காலம் அதில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாதாரண தண்ணீரை மட்டும் செப்பு பாட்டில்களில் வைத்து பயன்படுத்துங்கள். வெந்நீர், எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறு வைத்து பயன்படுத்த வேண்டாம். மீறி பயன்படுத்தினால் அவை செப்பு அயனிகள் வெளியாவதை துரிதப்படுத்தும். இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.
Copper Bottle Water Side Effects In Tamil
Copper Bottle Water Side Effects : அதனை முறையாக பராமரிக்காவிட்டால் அதிலிருந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். சரியாக பராமரிக்கப்படாத செம்பு பாட்டில்களிலிருந்து தண்ணீரை குடிக்கும் போது உங்களுடைய இரைப்பை, குடல் ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக உடலின் நச்சுக்களை நீக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
செப்பு குடங்கள்/ பாட்டில்களில் இருந்து தான் நம் உடலுக்கு தேவையான தாமிரத் தாதுவை பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உணவில் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது. பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகள், விதைகள், கீரைகள், முழு தானியங்களில் செம்பு தாதுக்கள் காணப்படுகிறது. இதன் மூலம் தாமிர உட்கொள்ளலை உறுதி செய்யலாம். இதுவே போதுமானதும் கூட.