
Easy Habits To Lose Weight : இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு. உடல் எடையை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி, யோகா என எதையாவது செய்கிறோம். ஆனால் மன அழுத்தம் மற்றும் உடலில் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கம் காரணமாக தான் எடை கூடுகிறது.
சிலருக்கு டயட் இருக்க முடியாது இன்னும் சிலருக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இருக்காது. ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
Easy Habits To Lose Weight : பொதுவாகவே உடல் எடையை குறைப்பதற்கு தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா என பல விஷயங்களை செய்வோம். ஆனால் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள சில பழக்கங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதும். உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் தெரியுமா? அது என்னன்னு என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சியா விதைகள் எடையை வேகமாக குறைக்கும்.. ஆனா எப்போது சாப்பிடனும் தெரியுமா?
Easy Habits To Lose Weight : உடல் எடையை குறைப்பதற்கான சில எளிய பழக்கங்கள்:
சிரிப்பு:
நாம் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் சத்தமாக சிரிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று அறிவியலின்படி கண்டறிந்துள்ளனர். உடல் பருமன் பற்றிய சர்வதேச இதழில் வெளியிட்ட ஒரு ஆய்வில் நாம் 10 முதல் 15 நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் பத்து முதல் 20% ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு முறையும் 10 முதல் 15 நிமிடங்கள் சிரிக்கும்போது சுமார் 10-40 கலோரிகள் இருக்க முடியும் என்று கண்டுபிடித்தனர்.
கால், கைகளை அசைக்கவும்:
நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து உங்களது கால் மற்றும் கைகளை நன்றாக அசைக்கவும். இப்படி செய்வதன் மூலம் கலோரிகள் எரிக்க உதவுகிறது. மேலும் இந்த செயலை தீவிரமாக செய்தால் ஒருநாளை 300 கலோரிகள் வரை எரிக்க முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளனர்.
Easy Habits To Lose Weight : ஐஸ் வாட்டர் குடியுங்கள்:
ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் வெப்பத்தை தூண்டப்படும். உடலின் வெப்பநிலைக்கு திரவத்தை சூடேற்றுவதற்கு உடல் ஆற்றலை செலவழிக்க வேண்டும். உடலில் எவ்வளவு ஆற்றல் பயன்படுத்தப்படுகின்றதோ அந்த அளவிற்கு உடலில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும். இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் சுமார் 17 கலோரிகள் எடுக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
சூயிங்கம் சாப்பிடுவது:
சூயிங்கம் வெறும் வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது தெரியுமா? ஆம், உடலியல் மற்றும் நடத்தையில் வெளியிடப்பட்ட ஆய்வில் சூயிங்கம் இதய துடிப்பு மற்றும் ஆற்றல் செலவை அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளன.
Easy Habits To Lose Weight : நில்!
ஆய்வு ஒன்றில் ஒரு நாளைக்கு சுமார் ஆறு மணி நேரம் உட்கார்ந்து இருப்பதற்கு பதிலாக நின்றால் கலோரிகள் எரிப்பதற்கு வழிவகுக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
குளிர்ந்த நீர் குளியல்:
குளிர்ந்த நீர் குளியல் வெப்பத்தை உருவாக்கி கலோரிகளை எரிக்கும் ஒருவகை கொழுப்பை செயல்படுத்துகிறது என்று செல் வளர்ச்சியை மாற்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த குளியல் வளர்ச்சியை மாற்றத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.
Easy Habits To Lose Weight : குளிரில் இரு:
இது கேட்பதற்கு உங்களுக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் சுமார் ஐந்து நிமிடம் கடுங்குளிரில் இருப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். குளிர்ச்சியை வெளிப்படுத்தும்போது உடலில் வெப்பநிலையை பராமரிக்க கடினமாக குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கலோரிகள் குறைக்கப்படும்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் '5' டீ வகைகள்!! நம்ப முடியாத பலன்கள்!!