உடல் எடையை குறைக்கும் '5' டீ வகைகள்!! நம்ப முடியாத பலன்கள்!!
Tea For Weight Loss : எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் '5' டீ வகைகளை தங்களுடைய வாழ்க்கை முறையில் சேர்ப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உடல் எடையை குறைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால் முயற்சி செய்தால் எல்லோராலும் செய்ய முடியும். உடல் எடை அதிகரிப்பது போல, உடல் எடையை குறைப்பதும் படிப்படியான விஷயம்தான். குறிப்பாக எடை குறைப்பு என்பது விரைவில் நடந்து வரக்கூடிய அதிசயம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் தன்னுடைய எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால், அவருடைய வாழ்க்கை முறையை கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சரியான தூக்கம் இதில் முக்கிய காரணியாக செயல்படுகின்றன. ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உடற்பயிற்சி செய்துவிட்டு, உணவு பழக்கத்தையும் சரியாக கடைப்பிடித்து இரவில் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் அவருக்கு எடை குறைப்பில் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்காமல் போகலாம்.
எடை குறைப்பில் கவனம் செலுத்த வேண்டிய காரணிகளில் தூக்கம் முக்கிய காரணியாகும். ஒருவர் சரியாக தூங்காவிட்டால் அவருடைய மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக சுரக்கத் தொடங்கும் இது உடல் எடை குறைப்பைத் தடுக்கும். அது மாதிரி காபின் பொருள்களை அதிகம் உட்கொள்வதாலும் உங்களுடைய தூக்கம் பாதிக்கப்படும். அதற்கு காபி குடிப்பதை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
ஒருவர் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்தால் அவருடைய திட்டங்கள் சரியானதாக இருக்க வேண்டும். எடை குறைப்பு பயணம் என்பது சத்து மிகுந்த உணவு, உடல் செயல்பாடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. இங்கு உடல் எடை குறைப்புக்கு உங்களுக்கு உதவக்கூடிய சில தேநீர் வகைகள் குறித்து காணலாம்.
இதையும் படிங்க: இந்த '4' விதைகளில் '1' போதும்; உடல் எடையை மளமளவென குறைக்கலாம்!!
கிரீன் டீ:
கிரீன் டீ அருந்துவதால் எடை குறைப்பில் நல்ல பலன்களை கண்கூடாக பார்க்க முடியும். கிரீன் டீ அருந்தும் போது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் மேம்படுகிறது. இதனால் எடை குறைப்பில் நல்ல மாற்றம் ஏற்படும். உங்களுடைய மனநிலையை சீராக்குவதிலும் கிரீன் டீ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. உங்கள் உடலில் சேரும் கலோரிகளை எரிக்க உதவும். கொழுப்பு செல்களை உடைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. நீங்கள் 3 முதல் 5 கப் கிரீன் டீ நீங்கள் குடிக்கலாம். மற்ற டீ அல்லது சோடாவிற்கு பதிலாக ஒரு நாளுக்கு ஒரு கப் கிரீன் டீ குடிப்பது உங்களுடைய இதயத்தை மேம்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இலவங்கப்பட்டை டீ :
மூலிகை டீ அருந்துவது உடலுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். இலவங்கப்பட்டை டீ அருந்துவதால் உங்களுடைய எடை குறைப்பு பயணம் நன்றாக இருக்கும். டீ தயாரிக்கும் போது இலவங்கப்பட்டை துண்டை போட்டு தயாரித்தால் போதும். இதன் ஆரோக்கிய பண்புகள் உங்களுக்கு கிடைக்கும். இலவங்கப்பட்டை வெறும் நறுமண பொருள் அல்ல. இதில் நார்ச்சத்து உள்ளது. உங்களுடைய வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி குறையும். இந்த மூலிகை உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒரு நாளில் காலை, மாலை ஆகிய நேரங்களில் இலவங்கப்பட்டை சேர்த்து டீ அருந்துவதால் நல்ல பலன்களை பெறலாம்.
இதையும் படிங்க: உட்கார்ந்த இடத்திலே தொப்பையை குறைக்க ஆசையா? இந்த '3' விஷயத்தில் கவனம்!!
பெப்பர்மின்ட் டீ:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்களுடைய கலோரிகளை கணக்கிடுவது அவசியம். அதனால் உங்களுடைய உடல் அதிக கலோரிகளை சேரவிடாத பெப்பர்மின்ட் டீ அருந்தலாம். இது கலோரிகள் இல்லாமல் இருப்பதாலே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்ததாக உள்ளது. நீங்கள் ஏதேனும் உணவு உண்ணும் முன்பாக,1 கப் பெப்பர்மின்ட் டீ அருந்துங்கள். இதனால் புத்துணர்வாக உணர்வீர்கள்.
உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகள் இந்த டீயில் உள்ளன. பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உடலில் சேரும் அதிக கலோரிகளை எரிக்க இந்த டீ உதவியாகவுள்ளது.
சீமை சாமந்தி டீ;
கெமோமில் டீ (Chamomile tea) என சொல்லப்படும் சீமை சாமந்தி டீ உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது. ஒரு நாளில் 1 கப் கெமோமில் டீ குடித்தால் உங்களுக்கு வயிறு வீக்கம், உப்பிய தோற்றம் குறையும். ஆழ்ந்த தூக்கம் ஏற்பட உதவுகிறது. எடை குறைக்க அற்புதமான பலன்களை தரும். நோயெதிர்ப்பு சக்தியையும் கூட்டும். சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்க தூக்கமின்மை காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு இந்த டீ நல்ல பலன்களை தரும். சீமை சாமந்தி பூக்களை நிழலில் காயவிட்டு இந்த டீ தயார் செய்யப்படுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள், அமில எதிர்ப்பு பண்புகள் அசிடிட்டி பிரச்சனையை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் பயிற்சி செய்வோர் இந்த டீ குடிப்பதால் தசை எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும்.
ஊலாங் டீ:
சீனாவில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் இந்த டீயானது கேமிலியா சின்னெசிஸ் (Camellia sinensis) என்ற செடியின் இலைகளில் இருந்து தயாரிப்பார்கள். சீனா, தைவானில் இந்த டீ பிரபலமானது. இதை அருந்துவதால் உடலில் உள்ள அதிக கலோரிகள் எரிக்கப்பட தூண்டப்படுகிறது. ஒரு கப் ஊலாங் டீ அருந்தினால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஏற்கனவே மன அழுத்தம், பதற்றம் இருப்பவர்கள் இந்த டீ குடிக்கும்போது நிம்மதியாக உறங்குவார்கள். உங்களுடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் ஊலாங் டீ குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தரும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் எடையும் குறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் எந்த வகையான டீ அருந்தினாலும் அதில் செயற்கை சர்க்கரையை அதிகம் சேர்ப்பதை குறைத்துக் கொள்வது எடை குறைப்புக்கு உதவும் உங்களுடைய தேநீரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது கூட நல்லது தான்.