ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம்:
ரூ.499: இந்த பிளானில் 75ஜிபி டேட்டா ரோல்ஓவர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ இலவச சந்தா, அன்லிமிடேடட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கிறது.
ரூ 999: இந்த திட்டத்தின் கீழ், 1 வழக்கமான சிம் கார்டும், அதனுடன் 3 நம்பர்களையும் ஃபேமிலி ஆட்-ஒன் என்ற முறையில் இணைக்கலாம். இதனால் மொத்தம் 100 ஜிபி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. OTT ஐப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கிறது.
ரூ. 1199: மேலே உள்ள திட்டத்தைப் போலவே, இந்த திட்டத்திலும் 1 வழக்கமான சிம், 3 இலவச குடும்ப ஆட்-ஆன் வசதி, அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் பேசிக் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அத்துடன் 150ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
Amazon Alexa-வுக்கு ஒரு நாளைக்கு 21,600 முறை ‘ஐ லவ் யூ சொல்லும்’ இந்தியர்கள்!
ரூ. 1499: இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 4 இலவச ஃபேமிலி ஆட் ஆன் வசதி, 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் வாய்ஸ் கால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், அமேசான் பிரைம் வீடியோ. நெட்ஃபிளிக்ஸ் பேசிக் ஆகியவை வழங்கப்படுகிறது.