Xiaomi 13 Pro அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் இதோ!

First Published | Feb 27, 2023, 10:45 AM IST

Xiaomi 13 Pro அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6.7 இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே காணலாம்.
 

ஷாவ்மி தரப்பில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான Xiaomi 13 Pro இப்போது அறிமுகம் ஆகியுள்ளது. இது MWC (Mobile World Congress) 2023 நடைபெறும் போது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Xiaomi இந்த புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனானது, 120Hz ரெப்ரெஷ் ரேட், 6.7-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளே, நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவை கொண்டுள்ளது. இந்த போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. குவால்காமின் லேட்ஸ்ட் பிராசசரான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 இருப்பது சிறப்பு. மொத்தம் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை: செராமிக் கருப்பு மற்றும் வெள்ளை.

விலை: 
Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனானது EUR 1,299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ. 1.13 லட்சம் ஆகும்.  இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பரில், Xiaomi 13 Pro அறிமுகமான போது CNY 4,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 60,000) விலையில் வந்தது. அதை விட இப்போது அறிமுகமான ஷாவ்மி 13 ப்ரோ சற்று விலை கூடுதலாக உள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்டுக்கான விலை ஆகும்.
 

Latest Videos


Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்:

Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனில் 6.73-இன்ச் E6 AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரேஷ் ரேட், டால்பி விஷன், HDR 10 வசதி கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு ஸ்மார்ட்போனை பார்க்கும் அனுபவம், வீடியோ தரங்களை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு ஏற்ப திரை 1,900 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்குகிறது. 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசசர், 12GB ரேம், 512GB மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆகியவை உள்ளன. ஃபோனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. அதற்கு ஏற்ப 4820mAh சக்தி கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

வரவிருக்கும் OnePlus Nord 3 ஸ்மார்ட்போனில் இவ்வளவு அம்சங்கள் உள்ளதா?

கேமராவைப் பொறுத்தவரையில் டிரிபிள் கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் , 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை உள்ளன.
 

click me!