PAN - Aadhar Link : வெறும் 2 நிமிஷத்துல இன்னும் பான் - ஆதார் இணைக்கலாம்!

First Published | Feb 27, 2023, 6:14 PM IST

பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்கும் காலக்கெடு நெருங்குகிறது. இதுவரை இரண்டையும் இணைக்காதவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இல்லையெனில் பான் செயலிழந்துவிடும்.
 

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இரண்டு அடையாள அட்டைகளும் மார்ச் 31, 2023க்கு முன் இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலிழந்துவிடும். மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதிலிருந்தும் அல்லது பான் தொடர்பான சேவைகளை பெறுவது சிரமமாகிவிடும்.
 

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியிருப்பதாவது: "ஆதார்-பான் இணைப்பது கட்டாயம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்! தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, விலக்கு வகையின் கீழ் வராத, பான் கார்டு பயனர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன், ஆதாருடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும்" 

Tap to resize

ஆதார் மற்றும் பான் இணைப்பு நிலையை ஆன்லைனிலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பததையும் எளிதாக பார்க்கலாம். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அவற்றை எஸ்எம்எஸ் அல்லது ஆன்லைன் மூலமாக இணைக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

Amazon பிரைம் உறுப்பினர்களுக்கு சிறப்பு ஆஃபர்கள்!

pan aadhar link

பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கும் முறை:
இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு incometaxindiaefiling.gov.in செல்லவும்
- உங்களுக்கு ஐடி இல்லை எனில். உங்கள் ஐடியை பதிவு செய்யவும்.
- உங்கள் பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி போர்ட்டலில் லாகின் செய்யவும். உள்நுழைவதற்கான பயனரின் ஐடி என்பது உங்கள் PAN (நிரந்தர கணக்கு எண்) ஆக இருக்கும்.
- உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும் பாப்-அப் விண்டோ தெரியும்.
- இணைக்க, மெனு பட்டியில் உள்ள 'சுயவிவர அமைப்புகள்' என்பதற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் உங்கள் பெயரை உள்ளிடவும்.
- எல்லாம் சரியாக இருந்தால் "ஆதார் அட்டையில் நான் பிறந்த ஆண்டு மட்டுமே உள்ளது" என்ற பெட்டியை சரிபார்க்கவும்.
- இதற்கு திரையில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
- "ஆதாருடன் இணை" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் உங்கள் பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டாகிவிட்டது.

Latest Videos

click me!