உலகின் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது யூடியூப். இதற்கு முன்பாக யூடியூப்பில் வீடியோக்களைப் பார்க்கும் போது பெரிய அளவில் விளம்பரங்களே வராது. அதன்பிறகு, 2 நொடி விளம்பரங்கள், 5 நொடி விளம்பரங்கள் என வரத்தொடங்கின. அந்த வரிசையில் தற்போது சராசரியாக 20 நொடி விளம்பரங்கள், அதுவும் தவிர்க்கவே முடியாதபடி வந்தவண்ணம் உள்ளன. விளம்பரங்கள் காட்டப்படுவதைத் நிறுத்த வேண்டும் என்றால், காசு கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.