தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.