தமிழகத்தில் இந்த இடங்களில் மட்டும் காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Sep 30, 2025, 07:43 AM IST

Power Cut Areas in Tamilnadu: மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. விழுப்புரம், மதுரை, மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும்.

PREV
15
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

25
மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

35
விழுப்புரம்

வி.ஓ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அயூரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னாச்சூர், கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

45
மதுரை

மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி, திருவாதவூர், கொட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

55
பெரம்பலூர்

பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories