விஜய்ய தூக்கி ஜெயில்ல போடுங்க சார்! 3 மாசமா ரொம்ப டார்ச்சர் பண்றாங்க - காவல் நிலையத்தில் குமுறிய இளம்பெண்

Published : Jul 21, 2025, 02:31 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் தொடர்ந்து தம்மை பற்றி ஆபாசமான வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதால் கட்சி நிர்வாகிகள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு இளம் பெண் புகார்.

PREV
14
தமிழக வெற்றி கழகத்தில் வைஷ்ணவி

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து வரும் இளம் பெண் வைஷ்ணவி நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளிடையே ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தவெக.வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார். இதனைத் தொடர்ந்து திமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

24
திமுகவில் வைஷ்ணவி

இந்நிலையில் இன்று காலை கோவை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த வைஷ்ணவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக தவெக.வில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வருகின்றேன். ஆனால் தவெக தொண்டர்கள் என்னை பற்றியும், என் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.

34
நடவடிக்கை எடுக்க தவறிய விஜய்

குறிப்பாக தவெக.வின் விர்சுவல் வாரியர்ஸ் (Virtual Warriors) என்று அழைக்கப்படும் கட்சியின் ஐடிவிங் நிர்வாகிகள் என்னை தொடர்பு படுத்தி மிகவும் ஆபாசமான முறையில் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. விர்சுவல் வாரியர்ஸ்ன் அத்துமீறலை கட்சியின் தலைவர் விஜய் கட்டுப்படுத்துவார், அவர்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு அறிக்கையாவது வெளியிடுவார் என்று காத்திருந்தேன். ஆனால் விஜய் அதுபோன்று எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

44
காவல் நிலையத்தில் இளம் பெண்

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளான நான் வேறு வழியின்றி தற்போது காவல் நிலையத்தை அணுகி உள்ளேன். என் மீது அவதூறு பரப்பும் விர்ச்சுவல் பாய்ஸ் மற்றும் கட்சியின் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். வீடுகளில் முடங்கி கிடக்கும் பெண்களிடம் கரண்டியை பிடுங்கிவிட்டு புத்தகத்தை வழங்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். ஆனால் இவர்கள் செய்யும் செயல் மீண்டும் பெண்களை வீட்டிலேயே முடங்கி கிடக்கச்செய்யும் வகையில் உள்ளது.

என்னைப் போன்ற இளம் பெண்கள் இப்போது தான் அரசியலுக்க வரத் தொடங்கி உள்ளனர். ஆனால் தவெகவினர் செய்யும் செயல் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories