இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரூ.20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சில பெண்களுக்கு விடுபட்டுள்ளது. அவர்களுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் இத்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆனால் அவர் பேசிய கருத்துகள், “வருகின்ற ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது போல் புரிந்து கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.