பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

First Published | Nov 13, 2024, 7:51 PM IST

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

பௌர்ணமி, அமாவாசை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துது கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நவம்பர் 15ம் வெள்ளிக்கிழமை பௌர்ணமி, 16ம் தேதி (சனிக்கிழமை) வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tap to resize

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 15ம் தேதி 460 பேருந்துகளும் 16ம் தேதி 245 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15ம் தேதி மற்றும் 16ம் தேதி 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பெளர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 15ம் 265 பேருந்துகளும் 16ம் தேதி 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15, 16ம் தேதி அன்று 11 பேருந்துகளும்,  மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த இரண்டு நாட்களுக்கும் 05 பேருந்துகளும் ஆப 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 5,969 பயணிகளும் சனிக்கிழமை அன்று 2,973 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 7,080 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!