தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பணியாளர்கள், ஊழியர்கள் தொடங்கி ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட அகில இந்திய பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் சொந்தமா வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அதிகம் செலவாவதால் அவர்களது கஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவில் குறிப்பிட்டத் தொகையை அரசே முன்பணமாக வழங்குகிறது.
மேலும் வீடு கட்டுவதற்கோ, வாங்குவதற்கோ அரசுப் பணியாளர்கள் வங்கிகளை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் கிடைக்கும். ஆனால் அந்த கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். இதனை தவிர்ப்பதற்காக ஊழியர்களும் அரசு வழங்கும் தொகையையே பெற்றுக் கொள்ள முனைவு காட்டுகின்றனர். அப்படி வழங்கப்படும் தொகை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும்.