பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! அதுவும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்!

First Published | Nov 13, 2024, 6:47 PM IST

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.

தமிழகத்தில் பத்திரப்பதிவு, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள்,  வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  (இ-மெயில்) மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: TN Heavy Rain Alert: இந்த 12 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதற போகுதாம்! ஆனால் சென்னை மிஸ்ங்!

Latest Videos


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பெரும்பாலான கல்லூரிகள் சேர்க்கை சார்ந்த தகவல்களை இ-மெயில் மூலமாகவே மாணவர்களுக்கு தகவல்கள் வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கு மின்னஞ்சல் முகவரி இருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரியை பள்ளி வகுப்பாசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  மாணவர்களுக்கு மாதம் ரூ.1000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? அப்ளை செய்வது எப்படி?

அதன்படி மாணவர்களுக்கு இ-மெயில் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முகவரிகளை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனுடன்  இ-மெயில் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இந்த பணிகளை அரசு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

click me!