அலறிய மருத்துவர்! பதறிய நோயாளிகள்! ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்! டாக்டர் திடீர் போராட்டம் ! நடந்தது என்ன?

First Published | Nov 13, 2024, 1:58 PM IST

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நோயாளியின் உறவினர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Latest Videos


இந்நிலையில் கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

CM stalin

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்றப் பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் கிண்டி அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள்,  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துக்கல்லூரிகளில் அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 

click me!