TN School Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்? அப்ளை செய்வது எப்படி?

First Published | Nov 13, 2024, 12:59 PM IST

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீட்டு புல திறனாய்வு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனாய்வு தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது. 

சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த திறனாய்வு தேர்வுக்கு மாண்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Tap to resize

இதுதொடர்பாக தமிழக தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 2024-25ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திறனாய்வு தேர்வுக்கு சில தகுதிகள் மற்றும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

School Student

ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருவாய் துறையினரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். 8-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தமாக ரூ.10 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

ஊரகத் திறனாய்வு தேர்வு தேதி

தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.  

ரூ.1000 ஊக்கத்தொகை

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். குறிப்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் விண்ணப்பிக்க இயலாது என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!