இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை.! மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

First Published | Nov 13, 2024, 11:59 AM IST

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிய கட்டுப்பாடுகள் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

School student

பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்பு

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன, குறிப்பாககிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல் துறையால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

school student

கட்டணயில்லா தொலைபேசி

பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியில் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) Student safeguarding advisory committee குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


மாணவர் மனசு

ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார் எதும் வந்திருந்தால்  அது தொடர்பாக  நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் "மாணவர் மனசு" என்ற புகார்ப் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாணவ/மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் அழைத்து செல்லக்கூடாது

மாணவர், மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள். ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பள்ளிகளிலிருந்து மாணவ/மாணவியர்களை NSS NCC, Scout & Guide. JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை

மேலும், மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 

click me!