திருமண உதவித் தொகையாக ரூ 2.50 லட்சம் அள்ளித்தரும் அரசு.! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா.?

First Published | Nov 13, 2024, 9:18 AM IST

தமிழக அரசு பல்வேறு திருமண உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில், விதவைகள், ஆதரவற்றோர், கலப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு நிதியுதவி, தங்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூபாய் 2.5 லட்சம்  திருமண உதவித்திட்டத்தைப் பெற விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா.?

திருமண உதவி திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  திருமணத்திற்கு நிதி உதவி இல்லாமல் சிரமப்படும் மக்களுக்காக நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இதன் படி பல்வேறு திருமண உதவி திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது.  டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் திட்டத்தின் கீழ் பயனளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஈவிஆர் மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

 நிதி உதவி மற்றும் தங்க நாணயம்

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு  25 ஆயிரம் நிதி உதவியும், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாய் நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்றோர் பெண்களுக்கான திருமண உதவித்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.  இந்த திருமண உதவித் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.  பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 8  கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படவில்லை.

Tap to resize

2.50 லட்சம் ரூபாய் நிதி உதவி திட்டங்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் 25ஆயிரம் மற்றும் ஐம்பதாயிரம் நிதி உதவியோடு 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது இதில் வருமான உச்ச வரம்பு எதுவும் இல்லை செய்யப்படவில்லை.  இதுபோன்ற தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு பெரிய அளவில் தெரிய வரும் நிலையில் மத்திய அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில் 2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறும் திட்டமானது மக்களுக்கு உரிய வகையில் சென்று சேராத நிலை தான் உள்ளது.

Celebrity Marriage

கலப்பு திருமண உதவி திட்டம்

அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டமாகும், இந்த திட்டமானது  2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். சாதி மறுப்புத் திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமணத்திற்காக 2.50 லட்சம் வழங்கும் மத்திய அரசு திட்டத்தின் பலன்களை பெற  'இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955 -ன் கீழ் பதிவுசெய்தவர்கள் மட்டுமே இந்த நிதி உதவியைப் பெற முடியும். ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

marriage

இந்து திருமண சட்டத்தில் பதிவு

இதனால் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாத நிலை உள்ளது.  எனவே திருமணம் செய்யும் போது இந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை செய்தவர்கள் இந்த நிதி உதவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதனை தொடர்ந்து 5 ஆம் வருட திருமண நாளில் மீதமுள்ள ஒரு லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும். 

marriage

தகுதிகள்

இத்திட்டத்தின்கீழ் நிதியைப் பெற, அரசு விதிகளின்படி தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு முதல் அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படித்தவராக இருப்பது அவசியம்.

நிபந்தனைகள்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஆண் வயது 21, பெண் வயது 18 நிரம்பி இருக்க வேண்டும்

விண்ணப்பம் சமர்பிப்பது  திருமணமான ஒரு வருடத்திற்குள் இருக்க வேண்டும்.

தேவைப்படும் சான்றிதழ்கள்

மணமகன் மற்றும் மணமகன் தொடர்பாக தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ் 

மணமகள் மற்றும் மணமகன் இருவருக்கும் இது முதல் திருமணம் என்பதற்கான சான்றிதழ்.

 வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ்.

இந்து திருமணச் சட்டம், 1955-ன் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு. ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 

விண்ணப்பிக்கும் முறை

ambedkarfoundation@nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 

Latest Videos

click me!