ஒரு கிலோ சின்ன வெங்காயம் 20 ரூபாய்.! சரசரவென குறைந்தது- அப்போ பெரிய வெங்காயம் விலை என்ன தெரியுமா.?

First Published | Nov 13, 2024, 7:45 AM IST

கனமழையால் காய்கறி விலை உயர்ந்த நிலையில், தக்காளி விலை குறைந்துள்ளது. பெரிய வெங்காயம் விலை உயர்ந்தாலும், சின்ன வெங்காயம் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

tomato onion

காய்கறி விளைச்சல் பாதிப்பு

சமையலுக்கு முக்கிய தேவை காய்கறிகளாகும், அந்த வகையில் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்வால் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டது. எனவே அனைத்து காய்கறிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்தது. இது மட்டுமில்லாமல் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டு உயர்ந்தது. ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்தனர். கிலோ கணக்கில் வாங்கி சென்ற நிலை மாறி அரை கிலோ அளவிற்கு வாங்கும் நிலை உருவானது.
 

ONION

குறைந்தது தக்காளி விலை

இந்தநிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளாதல் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் 100 ரூபாய்க்கு 5 கிலோ தக்காளி விற்கப்பட்டது. அதே நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலையானது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் விலையானது தரத்தை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில் சிறிய அளவிலான வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் தரம் உயர்ந்த வெங்காயம் 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tap to resize

சின்ன வெங்காயம் விலை என்ன.?

இதனிடையே சாம்பாருக்கு முக்கிய தேவையான சின்ன வெங்காயம் விலையானது உச்சத்தில் இருந்து தற்போது குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது விலையானது சரிந்துள்ளது. அந்த வகையில், திண்டுக்கல்லில் உள்ள வெங்காயப்பேட்டைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. கடந்த 3 நாட்களாக சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலையானது சரசரவென குறைந்துள்ளது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயம் தேக்கம்

தற்போதைய நிலையில் 100 டன் அளவிற்கு வெங்காயப்பேட்டையில் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

கோயம்பேட்டில் காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏறி இறங்கும் காய்கறி விலை

அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!