பெரிய வெங்காயம் விலை அதிரடியாக குறைய போகிறது.! வெளியானது ஹேப்பி நியூஸ்

First Published | Nov 14, 2024, 7:23 AM IST

வெங்காயத்தின் விலையானது கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் நீடித்து வரும் நிலையில் தற்போது இல்லத்தரசிகளுக்கு வெங்காயம் விலை தொடர்பாக குட் நியூஸ் வெளியாகியுள்ளது. 

tomato onion

போட்டி போட்டு உயரும் காய்கறி விலை

சமையலுக்கு முக்கிய தேவையானது காய்கறிகளாகும், ஆனால் கடந்த சில நாட்களாகவே பச்சை காய்கறிகளின் விலையானது நாள்தோறும் அதிகரித்து வந்தது.மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதே போல தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையும் போட்டி போட்டி நீயா நானா என்ற அளவில் உயர்ந்தது. அந்த வகையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயை தொட்டது. வெங்காயம் 90 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

அதன் படி மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெங்காயத்தை சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தற்போது வரை சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கு 15 லட்சம் டன் அளவிற்கு குறைந்த விலையில்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்தவ வகையில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு பொதுமக்கள் கூடும் பகுதியில் விற்கப்பட்டது.

Latest Videos


Onion

ரயில்களில் வெங்காயம்

மேலும் வெங்காய தட்டுபாட்டைக் குறைக்க இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ரயில் மூலம் வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை,  டெல்லி,போன்ற பல்வேறுபகுதிகளுக்கு இதுவரை  4850 டன் வெங்காயம் ரயில்வே மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தற்போது  4.5 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளது.  

குறையப்போகிறது வெங்காய விலை

இதனிடையே வெங்காயம் விலை குறைவு தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி  மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மார்க்கெட்டில் ரத்தை பொறுத்த வெங்காயம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில்  ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வரும் வெங்காயம் விலை வரும் நாட்களில் படிப்படியாக குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

கோயம்பேட்டில் காய்கறி விலை

இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி விலை என்ன.?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  காலிஃப்ளவர் ஒன்று பத்து ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 

click me!