life-style
வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.ஒரு கிலோ 70 முதல் 100 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அவதி
விலை உயர்ந்து வரும் நிலையில் வீட்டிலேயே எளிதாக வெங்காயம் வளர்க்கலாம். தோட்டம் அல்லது பால்கனியில் 3 வகை வெங்காயம் வளர்ப்பது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நல்ல தரமான வெங்காய விதைகள் அல்லது சிறிய வெங்காயத்தைத் தேர்ந்தெடுக்கவும். மண்ணில் சிறிது மணலைக் கலந்து, நீர் வடிகால் வசதியை உறுதி செய்யவும்.
விதைகள் அல்லது சிறிய வெங்காயத்தை 2-3 அங்குல ஆழத்தில் நடவும். ஒவ்வொரு செடிக்கும் இடையில் 3-4 அங்குல இடைவெளி விட வேண்டும்
பச்சை வெங்காயத்தின் கீழ் பகுதியை வெட்டி, அதை தண்ணீரில் வைக்கவும். சில நாட்களுக்குப் பிறகு, அதை மண்ணில் நடவும். நல்ல நீர் வடிகால் வசதியுள்ள தொட்டியையும் மண்ணையும் பயன்படுத்தவும்.
வேர்களை 1-2 அங்குல ஆழத்தில் நடவும். செடிகளுக்கு இடையில் சில அங்குல இடைவெளி விடவும். அதை வழக்கமான சூரிய ஒளியில் வைத்து, லேசாக தண்ணீர் ஊற்றவும்.
சிவப்பு வெங்காய விதைகள் அல்லது சிறிய சிவப்பு வெங்காயத்தைத் தேர்ந்தெடுக்கவும்.சுமார் 3-4 அங்குல ஆழத்தில் இயற்கை உரம் கலந்த மண்ணில் நடவும். ஈரப்பத்திற்காக அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
மண் லேசாகவும், இயற்கை உரம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். வெங்காயத்தை சூரிய ஒளி படும் பால்கனி போன்ற இடத்தில் வைக்கவும். பச்சை வெங்காயத்தை விரைவில் அறுவடை செய்யலாம்,