அதே போல விஜய்யும் இந்த கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கிறது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் தவெகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஆசை 100% இருக்கிறது. அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இடங்களில் பேசி இருக்கிறார்கள். உண்மையிலேயே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீண்டும் அமையக்கூடாது என்று விஜய் கருதினால் அவர் நிச்சயமாக அதிமுக பாஜக கூட்டணிக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த கூட்டணி பலமாகும் என்று கூறி இருக்கிறார்கள். தொடர்ந்து திமுகவுக்கு எதிரான அந்த அணிகள் பிளவுபடாமல் வாக்குகள் மொத்தமாக ஒன்று சேரும் என்று தொடர்ந்து அதிமுக சார்பிலும், பாஜக தரப்பிலும் பேசிய வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் பிரச்சாரத்தில் மேற்கொள்ளும் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டு இருக்கும்போது தவெக கொடி ஒன்று அசைக்கப்பட்டது. அப்போது அதனை சுட்டி காண்பித்து, ‘‘இதோ கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள்’’ என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். எனவே தவெகவின் வருகையை, அந்த கூட்டணி சந்தர்ப்பத்தை பாஜகவும், அதிமுகவும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இப்போது இபிஎஸ் எந்த கட்சியை சொல்கிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.