ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெறும் தேதியை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொங்கலுக்கு பிறகு விடிவுகாலம் பிறக்குமா? என விஜய் காத்திருக்கின்றனர்.
தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சென்சார் சான்றிதழ் வழங்காததால் படம் பொங்கலுக்கு ரீலீஸ் ஆகவில்லை. தணிக்கை வாரியத்துக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம் சென்றது.
உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜனநாயகன் திரைப்படத்துக்கு உடனே சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதற்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமை அமர்வில் சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது.
23
உச்சநீதிமன்றம் சென்ற தயாரிப்பு நிறுவனம்
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை அமர்வு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனால் படம் முடங்கி போனதால் பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றது. தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என சென்சார் போர்டும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.
33
உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை?
ஜனநாயகன் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 15ம் தேதியான பொங்கல் அன்று தொடங்கும் என முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ஜனவரி 19ம் தேதி (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு விசாரணைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இதனால் 19ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும்போது தான் ஜனநாயகனுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்குமா? இல்லை சென்சார் போர்டு தரப்பு பக்கம் தீர்ப்பு இருக்குமா? என்பது தெரியவரும்.