இதை எவன் செய்திருந்ததாலும் அவன் குடும்பமே விளங்காது! சாபம் விடுவது யார் தெரியுமா?

Published : Oct 03, 2025, 09:07 AM IST

கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க விஜய் இதை செய்ய வேண்டும்.

PREV
14
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் அரசியலில் புதுமுகம். ஆள் ஆளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்துவிட்டார்கள். அவர்கள் நிர்வாகிகள் செய்தது. கேட்ட இடத்தை கொடுக்கவில்லை. 2010ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் வழிநெடுக கூடினார்கள். அப்போது அவரை பார்க்கக்கூடிய கூட்டம் கட்டுக்கோப்பாக இருந்தது.

24
தவெக தலைவர் விஜய்

ஆனால் கரூரில் பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் வெறும் 27 ஆயிரம் பேர் தான் கூடினார்கள். அங்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேருந்தில் மாவட்டம் தோறும் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய இடங்களை தேர்வு செய்து திடல் போன்ற இடங்களில் முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது வயிற்று எரிச்சலை தருகிறது. இந்த நேரத்தில் விஜயை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்ல முடியும்.

34
தமிழக வெற்றிக்கழகம்

ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இதுபோன்று உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என சாபம் அளித்தார். இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பை கையில் பிடித்து விளையாடக்கூடிய இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்கள் வீடியோவில் கதறுவதை பார்த்தோம். கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தார்கள். அதேபோல தவெகவினர் இடம் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அந்த இடத்தை கொடுக்க மறுத்து இருக்க வேண்டும். வேறு அகலமான இடத்தை கொடுத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது.

44
விஜய்

விஜய்யால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். விஜய்க்கு அந்த இடத்தை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என தெரியவில்லை. விஜய் கேட்டதால் கொடுத்திருப்பதாக கூறுவது சப்பை கட்டு கட்டும் நோக்கம். சம்பவம் நடந்த உடன் உடனுக்குடனாக நீதியரசரை நியமித்துள்ளார்கள். அது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories