Published : Apr 30, 2025, 11:16 AM ISTUpdated : Apr 30, 2025, 11:20 AM IST
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பஞ்சகங்கா குளத்தில் அவருக்கு சன்னியாசி தீட்சை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பஞ்சகங்கா குளத்தில் அவருக்கு சன்னியாசி தீட்சை வழங்கப்பட்டது.
ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 வது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கினார். இன்று அதிகாலை சன்னியாசி தீட்சை வழங்கும் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்றது.
24
சன்னியாசி தீட்சை- பக்தர்கள் வழிபாடு
தொடர்ந்து பஞ்சகங்கா குளத்தில் சன்னியாசி தீட்சை கணேச சர்மாவிற்கு சத்திய சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில்,
இந்த சன்னியாசி தீட்சை வழங்கும் நிகழ்வை காண அமெரிக்காவில் வசிக்கும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இதற்கு முன்பு இது போன்ற ஒரு நிகழ்வை நான் நேரில் கண்டதில்லை, சன்னியாசி தீட்சை வழங்கும் நிகழ்வை நேரில் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.
34
ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மடாதிபதிகள்
முன்னதாக மடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71 வது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள உள்ள கணேஷ் சர்மா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தாய், தந்தை மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.
தற்போது காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டு இருப்பதால், அனைத்து உறவுகளையும் துறந்துள்ளார். சிறுவயதில் இருந்து வேதங்கள் மீது அதிக ஈடுபாடுகளைக் கொண்டிருந்துள்ளார். யஜூர் , சாம வேதங்களை பயின்றுள்ளார். மேலும் சங்கராச்சாரியாராக நியமனம் செய்யப்படுவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருந்ததின் அடிப்படையில் கணேஷ் சர்மா இளைய மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.