உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.! குவியும் திருநங்கைகள்

Published : Apr 30, 2025, 08:37 AM IST

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்து, மறுநாள் தாலி அறுக்கும் நிகழ்வும் நடைபெறும்.

PREV
14
உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.! குவியும் திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது.  3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்கள் குலதெய்வமாக வணங்கும் கோயிலாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க  தமிழகம் மட்டுமின்றி,

24
கூவாகத்தில் குவியும் திருநங்கைகள்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான  திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.திருநங்கைகள்  கூத்தாண்டவரை தங்கள் கணவராக பாவித்து திருவிழாவின் போது தாலி கட்டிக் கொண்டு ஆடி பாடி மகிழ்ந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மறுநாள் கூத்தாண்டவர் தேர் அழிகலம் நோக்கி புறப்பட்ட பிறகு திருநங்கைகள் பந்தலடியில் தாலி அறுத்து விதவைக் கோலம் பூண்டு சோகத்துடன் தங்கள் இல்லங்களுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

34
கூழ் குடங்களுடன் ஊர்வலம்

மிகவும் பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.கூவாகம், தொட்டி, நத்தம், வேலுார், அண்ணாநகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டு வழிபட்டனர்.

44
தாலி கட்டும் நிகழ்ச்சி

இந்தச் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதன்பின்னர் கூவாகம் அருகே உள்ள பந்தலடி பகுதியில் திருநங்கைகளுக்கு தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வரும்,16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories