கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது. கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
Summer holidays special classes : வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத அளிவிற்கு வாட்டி வதைக்கிறது. மேலும் வருகிற மே மாதம் 4ஆம் தேதி முதல் அக்னி வெயில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி ஆண்டு தேர்வானது இந்தாண்டு முன்கூட்டியே முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
24
மாணவர்களுக்கு கோடை விடுமுறை
இதனால் மாணவர்கள் வெளியூர்களுக்கு சுற்றுலா, உறவினர்கள் வீட்டிற்கு பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற வேண்டும் என்ற காரணத்தால் கோடை விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட
34
சிறப்பு வகுப்பு- சிறுமி பலி
அமுதன் என்பவரின் 4 வயது மகள் ஆருத்ரா பள்ளியில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ( நர்சரி & பிரைமரி/ தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை)
44
சிறப்பு வகுப்பு நடத்த தடை
கோடை கால விடுமுறை நாட்களில் கண்டிப்பான முறையில் செயல்படக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.