பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி! இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த திமுக

Published : Apr 29, 2025, 05:04 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்ததற்கு, ஆர்.எஸ். பாரதி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
15
பாஜக கூட்டணிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி! இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த திமுக
எடப்பாடி ஸ்டாலின் மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், திமுக - அதிமுக இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்ட சமூகவலைதள பதிவில்,

Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!  2026-ல் ஒரே version தான் - அது அதிமுக version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்

25
அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது

இதனையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள பதிலடி அறிக்கையில்,  கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது.

அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டனிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி! தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

35
66 அதிமுக எம்.எல்.ஏ-கள் 2026-ல் 6 கூட கிடைக்காது

அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே  சாட்சி! தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி! தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவிற்கும், அதன் அடிமை அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி! இப்போது இருக்கிற 66 அதிமுக எம்.எல்.ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.

45
தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது?

திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்யும் இந்த கோமாளிக்கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது. ‘அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது?

இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களின் ரத்தம் குடித்த ஆட்சி, பழனிசாமியின் ஆட்சி. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா...’’ என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிசாமி ஆட்சிக்கு சாட்சி! 

55
இனி எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது

நீட் உள்பட பல்வேறு மாநில உரிமைகளை சுயநலத்துக்காக டெல்லியிடம் அடகு வைத்த அரசுக்கு பழனிசாமியே சாட்சி! தலைவி வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கொடநாடே சாட்சி! அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி! இப்படி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும்.

தமிழ்நாட்டு வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது என ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories