மே மாதத்தில் தேர்தல்.! தேதி குறிக்கும் தமிழக தேர்தல் ஆணையம்.! களத்தில் இறங்கும் திமுக, அதிமுக

Published : Apr 29, 2025, 04:20 PM ISTUpdated : Apr 29, 2025, 04:33 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 448 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்களுக்கும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

PREV
14
மே மாதத்தில் தேர்தல்.! தேதி குறிக்கும் தமிழக தேர்தல் ஆணையம்.! களத்தில் இறங்கும் திமுக, அதிமுக

Tamil Nadu local body elections : தமிழக அரசு என்ன தான் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும், அந்த திட்டங்கள் குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு சென்றடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் முக்கியமானவர்கள். இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழப்பு போன்ற காரணங்களால்,

448 பதவியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில்  சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப் பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலிப்பதவியிடங்களுக்கும்

24
Local body by-elections

உள்ளாட்சி இடைத்தேர்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலிப் பதவியிடங்களுக்கும் தற்செயல்/இடைக்காலத் தேர்தல்களை (Casual/Mid-Term Elections) எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று  தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

34
ADMK DMK

தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

சென்னை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பா. ஜோதி நிர்மலாசாமி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தற்செயல் /இடைக்காலத் தேர்தல்களை முன்னிட்டு சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர்,

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் மேற்படி தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி  வழியாக இன்று (29.04.2024) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். 

44
Local body by-elections in May

சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர்  கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப, மாவட்ட தேர்தல் அலுவலர் / சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்)  வெ. மகேந்திரன், முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்)  N. விஸ்வநாதன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்காணொலி ஆய்வுக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories