சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி- ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

Published : Apr 29, 2025, 03:34 PM IST

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் Part-1 தான், 2026-ல் Version 2.0 Loading எனக் குறிப்பிட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 

PREV
14
சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி- ஸ்டாலினை விளாசும் எடப்பாடி

EPS confident of ADMK victory in 2026 election : தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  நான் தொடங்கியுள்ள இந்த பயணம் நீண்டது. முதலமைச்சராக ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிற இந்த வேளையில், இந்த மன்றத்தில் நின்று உறுதியோடு சொல்கிறேன், என் பயணம் தொடரும்.  தமிழ்நாட்டிற்காக, தமிழர்களுக்காக, மாநில உரிமைகளுக்காக என் பயணம் தொடரும்.  

24
Stalin Assembly

2026-ல் Version 2.0 Loading

இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,  கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி!

34
Edappadi Palaniswami

ப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு  திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!

44
Dravidian Model 2.0

சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி

அதிமுக  ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே version தான் - அது #TN_AIADMK version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories