பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி! அடுத்தடுத்து வெளியான ட்விஸ்ட்!

Published : Apr 29, 2025, 02:35 PM IST

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், நீதிபதி மாற்றம் செய்யப்பட்டது.

PREV
14
  பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி! அடுத்தடுத்து வெளியான ட்விஸ்ட்!
pollachi

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக  திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ்,  அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் பின்னர் சிபிஐ வசம் சென்றது. 

24
pollachi case

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையிலும், அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து அரசு தரப்பு, எதிர் தரப்பு என அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

34
pollachi case

தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிபதி மாற்றம்

அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்ட 9 பேர்களுக்கு எதிராக சாட்சியங்கள் அளித்ததை அடுத்து அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நந்தினி தேவி உள்பட 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

44
pollachi rape

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகிறதா?

இந்நிலையில், இந்த வழக்கில் திட்டமிட்டபடி 13-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற நடவடிக்கைக்கு சிறிது காலமாகும் 
என்பதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பின்னரே கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories