தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்

Published : Apr 30, 2025, 10:36 AM ISTUpdated : Apr 30, 2025, 10:48 AM IST

தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் வி.விஜய பிரபாகர் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்வேறு தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

PREV
14
தேமுதிக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: விஜய் பிரபாகரன் இளைஞரணி செயலாளர்
தேமுதிக செயற்குழு கூட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் இருந்த தேமுதிக அதே கூட்டணியில் தொடர்கிறதா.?

அல்லது புதிய கூட்டணியில் இணையவுள்ளதா,? என கேள்விகள் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  (30.04.2025) இன்று  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில்நடைபெற்றது.

24
விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர் இன்று (30.04.2025) முதல் நியமிக்கப்படுகிறார்.  இவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள்,

34
தேமுதிக வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்

சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.  இதே போல தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஒருமனதாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில்

44
தேமுதிக புதிய நிர்வாகிகள்

தலைமை கழக நிர்வாகிகள்

பிரேமலதா விஜயகாந்த்- கழக பொதுச் செயலாளர்

டாக்டர் V.இளங்கோவன்- கழக அவைத்தலைவர்

எல்.கே.சுதீஷ், - கழக பொருளாளர்

தப.பார்த்தசாரதி- கழக தலைமை நிலையச் செயலாளர்

அழகாபுரம்.R.மோகன்ராஜ்- கழக கொள்கைப் பரப்பு செயலாளர்

எம்.ஆர்.பன்னீர்செல்வம் -  கழக துணைச் செயலாளர்

SSS.U.சந்திரன்- கழக துணைச் செயலாளர்

S.செந்தில்குமார்- கழக துணைச் செயலாளர்

R.சுபா ரவி - கழக துணைச் செயலாளர்

Read more Photos on
click me!

Recommended Stories