ஜூன் 4ஆம் தேதி வரை இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லாதீங்க- தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் ரிப்போர்ட்

Published : May 26, 2025, 08:55 AM IST

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற இடங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

PREV
17
கோடை விடுமுறை சுற்றுலா திட்டங்கள்

தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மழையானது புரட்டி போட்டு வருகிறது. அந்த வகையில நீலகிரியில் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. இந்த நிலையில் பள்ளி விடுமுறைகள் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் எந்த இடங்களுக்கு செல்லலாம், செல்ல வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதுகாப்பாக, பாதுகாப்பாக இல்லாத இடங்கள் எவை. இது ஜூன் 4 வரை பொருந்தும், பிறகு மழை குறையும். எனவே அதன்படி பயணத்தை திட்டமிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

27
நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம்

தவிர்க்க வேண்டிய இடங்கள் - அவலாஞ்சே, பந்தலூர், அப்பர் பவானி, பார்சன் பள்ளத்தாக்கு, தேவலா, ஓவாலி, நெல்லியம், முக்கூர்த்தி, போர்த்திமுண்ட்.

பாதுகாப்பான இடங்கள்- குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி. சாதாரண மழை பெய்யும், இன்னும் நிலையான மழை காரணமாக இடங்களை பார்க்க முடியாது.

37
கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்

தவிர்க்க வேண்டிய இடங்கள் - வால்பாறை, சோலையார்

பாதுகாப்பான இடங்கள் - பொள்ளாச்சி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகள். பொள்ளாச்சியில் மழை பெய்தாலும் வால்பாறை போல் தீவிரமாக இருக்காது.

47
தமிழகத்தில் உள்ள மற்ற மலைகள் - பாதுகாப்பானவை

தமிழகத்தில் உள்ள மற்ற மலைகள் - பாதுகாப்பானவை

ஏலகிரி, ஏற்காடு, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, கொடைக்கானல் பாதுகாப்பாக உள்ளது.

57
தவிர்க்க வேண்டிய கேரள சுற்றுலா இடங்கள்

இடுக்கி மாவட்டம் - மூணார், வாகமன், பீர்மேடு, இடுக்கி

திருவனந்தபுரம் மாவட்டம் - பொன்முடி

பத்தனம்திட்டா மாவட்டம் - கவி மற்றும் மலைப்பகுதிகள்

கோட்டயம் மாவட்டம் - முண்டகாயம், பூஞ்சார், குமர்கோம், கோட்டயம், வைக்கம் மற்றும் சுற்றியுள்ள மலைகள்

திருச்சூர் மாவட்டம் - இடமலையார், அதிரப்பிள்ளி மற்றும் மலைகள்

காசர்கோடு, கோழிக்கோடு மலைப்பகுதிகள், கண்ணூர் மலைப்பகுதிகளும் தவிர்க்க வேண்டும்

வயநாடு மாவட்டம் - வைத்ரி, பூகோட், லக்கிடி போன்ற இடங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும்.

67
தவிர்க்க வேண்டிய கர்நாடக சுற்றுலா இடங்கள்

கூர்க் மாவட்ட மலைப் பகுதிகள், உடுப்பி மலைப் பகுதிகள், ஷிமோகா மாவட்ட மலைப் பகுதிகள், சிக்கம்கலூர், ஹாசன், உத்திர கன்னட மலை,

77
நீலகிரியில் கொட்டிய மழை

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே நாளில் 300 மி.மீட்டர் மழையானது கொட்டியுள்ளது. அதிலும் பார்சன் பள்ளத்தாக்கு நேற்று முன் தினம் 384 மிமீ மை பெய்ய நிலையில் நேற்று மீண்டும் 334 மிமீ. கடந்த 48 மணி நேரத்தில், பார்சன் பள்ளத்தாக்கு 718 மிமீ பதிவாகியுள்ளது, இதே போல கடந்த 24 மணி நேரத்தில், அவலான்சே - 353, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு - 334, போர்த்திமுண்ட் - 320, அப்பர் பவானி - 298, முகூர்த்தி அணை - 183, மரகதம் - 182 உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories