போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? இப்பவே அள்ளிச்செலும் மக்கள்

Published : May 26, 2025, 07:52 AM IST

காய்கறி சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை கடந்த காலங்களில் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் விலை சீராக உள்ளது. 

PREV
15
தக்காளி வெங்காயமும் சமையலும்

சமையலில் ருசியை கொடுப்பது முக்கிய காற்கறிகளாகும், அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாமல் பெரும்பாலான சமையல் செய்ய இயலாது. அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி வரை சமைப்பதற்கு தக்காளி, வெங்காயம் தேவை. 

எனவே காய்கறி சந்தையில் மக்கள் எந்த காய்கறிகளை வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி வெங்காயத்தை வாங்கிவிடுவார்கள். அந்த வகையில் கடந்த வருடம் இறுதியில் யாரும் எதிர்பாராத உச்சத்தை தக்காளி மற்றும் வெங்காயம் தொட்டது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரையும், வெங்காயம் 120 ரூபாய் வரையும் விற்பனையானது.

25
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை

இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லாத சமையலை தேடி தேடி சமைத்தனர். எனவே எப்போதும் விலையானது குறையும் என காத்திருந்தனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து காய்கறி சந்தைகளுக்கு அதிகரித்துள்ளதால் விலையானது குறைந்துள்ளது.

 இதன் படி 50 ரூபாய்க்கு 3 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்தது. ஒரு கிலோ 25 முதல் 45 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டது.

35
மழையால் மீண்டும் உயரும் தக்காளி விலை

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தங்காளி விளைச்சர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது தக்காளி விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு கிலோ 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் தொட்டுள்ளது. 

எனவே வரும் நாட்களில் வரத்தை பொறுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை நிர்ணயிக்கப்படும். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

45
கோயம்பேட்டில் காற்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், 

வாழைப்பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

55
பச்சை காய்கறி விலை என்ன.?

காலிபிளவர் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,

 மாங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories