உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது, அடக்கி பேச வேண்டும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்-எச்சரிக்கும் எச்.ராஜா

Published : May 26, 2025, 07:13 AM IST

 உச்சநீதிமன்றம் ED விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததை அடுத்து, உதயநிதி ஸ்டாலின், அமலாக்கத்துறை மட்டுமல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் எனக் கூறியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PREV
14
தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த வாரம் டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, தொழிலதிபர் ரத்தீஸ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. 

இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நிலையில், அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது என்றும் வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம்,

24
இடிக்கும், மோடிக்கும் அடிபணிய மாட்டோம்

ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பியது. இதனையடுத்து விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, எங்​களை மிரட்டி அடிபணிய வைக்க முடி​யாது. நாங்​கள் இ.டி. மட்​டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூவர்ண கொடி பேரணி தஞ்சையில் நடைபெற்றது.

34
இடைக்கால தடை மட்டுமே- எச் ராஜா

இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வருக்கு மூன்று ஆண்டுகளாக புத்தியில் படவில்லை தற்போது புத்தியில் பட்டுள்ளது அதனால் அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த ஆகாஷ் ஏவுகனை பாகிஸ்தானை அலங்கோல படுத்தியது, தற்போது ஒரு ஆகாஷ் வந்துள்ளார் அறிவாலயத்தை அலங்கோலப்படுத்த, அதனால் ஒன்றும் கவலை இல்லை உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

44
உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது- எச் ராஜா

அதை நினைத்துக் கொண்டு உதயநிதி ரொம்ப ஆடக்கூடாது கொஞ்சம் அடக்கி பேச வேண்டும் விலை கொடுக்க வேண்டி இருக்கும். அனைவர் பேசுவதற்கும் ராஜா பதில் சொல்ல முடியாது, உதயநிதியோ உளறல் நிதியோ இருக்கட்டும் நடக்கட்டும் என்று தெரிவித்தார்

Read more Photos on
click me!

Recommended Stories