லீவு அதுவுமா சென்னையில் இன்று எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ லிஸ்ட்!

Published : Jun 15, 2025, 06:54 AM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். அம்பத்தூர், சிட்கோ, மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

PREV
14
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை(TANGEDCO) சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருவதால் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் மின்வாரியத்திற்கு உடனே போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவில்லை.

24
மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

34
சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

44
அம்பத்தூர் சிட்கோ

ஈபி மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவல் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டுஅம்மன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, கச்சினுகுப்பம், அம்பேத்கர் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, டாஸ் எஸ்டேட் 7 முதல் 10வது தெரு, எம்ஜிஆர் தெரு, புதிய டைனி ஷெட், சிட்கோ எஸ்டேட் 8வது தெரு, 3வது மெயின் ரோடு, 1வது மெயின் ரோடு, தொழிலாளர் குடியிருப்பு, 12வது தெரு, 5 முதல் 11வது தெற்கு கட்ட செக்டார் 3, 3வது குறுக்குத் தெரு, எஸ்பி 17 முதல் 28 வரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories