ஆளுநர் vs அரசு: கிடப்பில் போட்ட மசோதாக்கள் எத்தனை.? ஒப்புதல் கொடுத்த சட்ட முடிவுகள் என்ன என்ன.?

Published : Jun 14, 2025, 11:48 AM IST

தமிழக ஆளுநர் மற்றும் அரசு இடையேயான மோதல், பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 சட்ட மசோதாக்களில் 15-க்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார், இரண்டு மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

PREV
15
ஆளுநரும் தமிழக அரசு மோதலும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இது முக்கியமாக ஆளுநரின் அதிகார வரம்பு, சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல், மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக சட்டமன்றத்தில் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்த ஆளுநர் இந்த ஆண்டும் இதே நடைமுறையை பின்பற்றினார்.

 சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்காமல் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது "சிறுபிள்ளைத்தனமான" செயல் என்று திமுகவின் முரசொலி நாளேடு விமர்சித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் அரசு தயாரித்த உரையை முறையாக வாசிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

25
ஆளுநர் மீதான சர்ச்சைகள்

அடுத்தாக ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் "திராவிடம்" என்ற சொல்லை தவிர்க்கச் செய்ததாகவும், மதுரையில் தனியார் கல்லூரியில் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷம் எழுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தமிழக அரசு மற்றும் திமுகவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம், ஆளுநர்கள் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அடுத்தடுத்து சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து வருகிறார்.

35
தமிழக சட்டமன்ற மசோதாக்கள்

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 15 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்கள், தீ தடுப்புக்கான செயல்பாட்டு நேரத்தை குறைக்க, அறிவியல் சார் நில வரைபடம் அடிப்படையில் புதிய தீயணைப்பு நிலையங்களின் அமைவிடங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தீயணைப்புத் துறை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா

45
ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்கள்

கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான சட்டமசோதா, தொழில் புரிவதை எளிதாக்கும் வகையில், கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான தொழிலாளர் சட்டங்களில் கடும் தண்டனைகளை குறைத்தல் உள்ளிட்டவற்றுக்கான சட்ட மசோதா, உயிரி மருத்துவக் கழிவுகளை குவித்தல், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து கழிவுகளை கொட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்குவதற்கான சட்ட மசோதா ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் உள்ளிட்ட 15 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புல் அளித்துள்ளார்.

அசல் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அசையா சொத்துகளை பதிவு செய்யும் பதிவு சட்ட திருத்த மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா மற்றும் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை மட்டும் இன்றும் நிலுவையில் வைத்துள்ளார்.

55
ஒப்புதல் அளித்த 15 மசோதாக்கள்
  • உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக்கும் மசோதா ( 2 மசோதாக்கள் )
  • அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா
  • கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா
  • மருத்துவக் கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை தண்டனை அளிக்கும் சட்ட மசோதா
  • ஊராட்சிகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் முறை மற்றும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை அகற்றும் முறை ஆகியவற்றிற்கான அனுமதி அளிப்பது தொடர்பாக சட்ட மசோதா
  • தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் அபராதங்களை குறைப்பது தொடர்பான சட்ட மசோதா
  • நகரும் படிகட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்க மற்றும் இயக்க அனுமதி மற்றும் உரிமம் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தும் சட்ட மசோதா
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு நகர்ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா
  • ஜி.எஸ்.டி., சட்டத் திருத்த மசோதா
  • 4 நிதி மசோதாக்கள்
Read more Photos on
click me!

Recommended Stories