கெத்து காட்டி அட்ராசிட்டி செய்த பாஜக முக்கிய பிரமுகர் கைது! யார் இந்த மிளகாய்ப்பொடி வெங்கடேசன்?

Published : Jun 14, 2025, 12:00 PM IST

பிரபல ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் பாஜகவில் இணைந்து, பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் பதவி பெற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர், பணமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

PREV
14
கே.ஆர்.வெங்கடேசன்

Milagaipodi Venkatesan: சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய்ப்பொடி வெங்கடேசன். பிரபல ரவுடியான இவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தல், அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திரா போலீசாரால் பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

24
60 வழக்குகள் நிலுவை

மேலும் ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இதனிடையே பாஜகவில் இணைந்த ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசனுக்கு, பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து கட்சிக்கு நிதி உதவியை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

34
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் புகைப்படம்

இந்நிலையில், கடந்த 7ம் தேதி மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டி போட்டிக்கொண்டிருந்த நிலையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகி வினோஜ் பி செல்வம் ஆகியோரது ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் மிளகாய் பொடி வெங்கடேசன் இடம் பெற்றிருந்தார். அமித்ஷாவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற புகைப்படங்களும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44
மூன்று மாநில போலீசாரக்கு சவால்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் ரவுடி வெங்கடேசன் பதிவிட்டு ஆந்திர காவல்துறை, தமிழக காவல்துறை, தெலங்கானா காவல்துறை மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரையும் டேக் செய்திருந்தார். இப்படி கெத்து காட்டும் வகையில் அட்ராசிட்டி செய்த ரவுடி வெங்கடேசன் பணமோசடி தொடர்பாக இன்று ஆவடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories