மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது.! தமிழக அரசின் குஷியான தகவல்

Published : Jul 17, 2025, 07:25 AM ISTUpdated : Jul 17, 2025, 07:28 AM IST

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் லேப்டாப் வழங்கப்படும் என தகவல்

PREV
14
வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம்

நவீன காலத்திற்கு ஏற்ப படிப்புகளும் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது உலகத்தையே ஏஐ தொழில்நுட்பம் தான் கைக்குள் வைத்துள்ளது. எது உண்மை, எது பொய் என கண்டறிவதே ரொம்ப ரொம்ப கடினமான காலமாக மாறி வருகிறது. எனவே நவீன வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி திட்டங்களும் மாற்றப்பட்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும், உலகத் தரத்திற்கு ஏற்ற கல்வி வசதிகளையும் வழங்குவதாகும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது.

24
தமிழகத்தில் மாணவர்களுக்கு லேப்டாப்

இந்த திட்டம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. 2025-26 நிதியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்திருந்தார். 2025-26 நிதியாண்டிற்காக, 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 2,000 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. 

இந்த தொகை இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். எனவே ஒரு லேப்டாப்பின் மதிப்பு 25,000 ரூபாயாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லேப்டாப்பில் 8 ஜிபி RAM, 256 ஜிபி SSD, 14 அல்லது 15.6 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிகள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் லேப்டாப் அல்லது டேப்லெட் பெறலாம் எனவும் தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

34
லேப்டாப் டெண்டர் - முன்னனி நிறுவனங்கள் பங்கேற்பு

இந்த இலவச லேப்டாப் பெற தகுதியுள்ள மாணவர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் வகையில் தமிழக அரசு 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது, 

ஏசர், டெல், மற்றும் எச்.பி. நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்பு புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Acer, Dell, HP நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.

44
மாணவர்களுக்கு எப்போது லேப்டாப் வழங்கப்படும்.?

இதன்பிறகு தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி ( technical bid) ஆய்வு செய்யப்படும். தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளிகளில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடமிருந்து விலை தொடர்பான ஒப்பந்த புள்ளி ( price bid) பெறப்படும்.

 இதன் பிறகு ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு ஆணை வழங்கப்படும். எனவே அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories