விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் மாணவிகள் அவரை கட்டிப்பிடித்ததற்கு வேல்முருகன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு மாணவிகள் பதிலடி கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் ஒவ்வொரு ஆண்டும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு சென்னை அழைத்து வந்து விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். அதேபோல் கடந்த 2025ம் ஆண்டு மாவட்டம் வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர் பட்டியல் தயாரிக்கப்பட்டு பரிசு பொருள்கள் மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார். முதற்கட்டமாக மே மாதம் 30ம் தேதி 88 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த ஜூன் 4ம் தேதி கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யுடன் மாணவ மாணவிகள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவருடன் கை குலுக்கி கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினர்.
24
வேல்முருகன்
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இரண்டு கிராம் தங்கத்திற்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வைக்கிறார்கள். இதுதான் தமிழர்களின் மரபா? மாணவிகளின் தோள் மீது கை போட பெற்றோர் எப்படி சம்மதிக்கிறார்கள். ஒரு கூத்தாடி முன் பிள்ளைகளை நிற்க வைக்கவேண்டாம் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
34
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
இதற்கு சில மாணவிகள் விருது வழங்கும் விழாவிலேயே வேல்முருகனுக்கு பதில் அளித்தனர். நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது நாங்கள் என் தந்தையுடன் எடுத்து கொள்வது போல் உணர்கின்றோம் என்று கூறியிருந்தனர். இதைனயடுத்து தமிழக வெற்றிக் கழகம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளித்தது. அந்த புகார் மீது விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் மாநில டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வேல்முருகனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.