Digital Politics Tamil Nadu 2026 Elections: வாட்ஸ்அப் பல்கலைக்கழகமும், ட்விட்டர் (X) போர்க்களமும் இன்று வெறும் பொழுதுபோக்கு தளங்கள் மட்டுமல்ல; அவை 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் மாபெரும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பரபரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதி மற்றும் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதே போன்று வேட்புமனு தாக்கலும் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் தான் சமூக வலைதளங்கள் தான் தமிழக அரசியலை தீர்மானிக்கிறதா? என்பது குறித்துஇந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. மக்களை எளிதில் சென்றடைய சமூக வலைதளத்தை பலரும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
26
வாட்ஸ்அப் தாக்கம் (The Power of WhatsApp)
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவியுள்ள வாட்ஸ்அப், இன்று அரசியல் கட்சிகளின் முதன்மை ஆயுதம். 2026 தேர்தலுக்காக ஒவ்வொரு பூத் அளவிலும் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்மைச் செய்திகளை விட, உணர்ச்சிகரமான 'பார்வர்டு' மெசேஜ்கள் ஒரு கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன.
36
ட்விட்டர் (X) - கருத்துருவாக்கத்தின் மையம்
படித்த இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க ட்விட்டர் தளம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஹேஷ்டேக் (#Hashtag) மூலம் ஒரு கட்சியின் பிம்பத்தை ஒரே நாளில் மாற்றவோ அல்லது சிதைக்கவோ முடியும் என்பதை ஐடி விங்குகள் (IT Wings) நன்கு உணர்ந்துள்ளன.
2026 தேர்தலில் செயற்கை நுண்ணறிவு (AI) மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. மறைந்த தலைவர்களின் குரலில் பேசுவது, எதிர்த்தரப்புத் தலைவர்களின் வீடியோக்களை மாற்றி அமைப்பது என டிஜிட்டல் அரசியலின் நிழல் முகம் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.
56
யாருடைய ஐடி விங் பலமானது?
திமுக (DMK): பலமான தரவு மற்றும் திட்டமிட்ட பிரச்சாரங்கள்.
அதிமுக (AIADMK): தொண்டர்களை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் நெட்வொர்க்.
தவெக (TVK - Vijay): இளைஞர்களைக் கவரும் வைரல் வீடியோக்கள் மற்றும் ரசிகர் மன்ற பலம்.
பாஜக (BJP): தேசிய அளவிலான தொழில்நுட்பப் பலம் மற்றும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்.
18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். வாக்காளர்களாகிய நாம் முதலில் எதை நம்ப வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் எல்லா செய்திகளும் உண்மை என்று அர்த்தமில்லை. முதலில் செய்திகளின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ அவர்களுக்கு உங்களது வாக்கை செலுத்தி முதல்வராக்கலாம்.