ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.1.32 கோடி ஆகும். அசையா சொத்துகள் ரூ.2.10 கோடி ஆகும். முதல்வர் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் வருமானம் 5.33 லட்சம் ரூபாய் ஆகும். கையிருப்பு ரொக்கத்தைப் பொறுத்தவரை, முதல்வரிடம் 10,000 ரூபாயும், துர்கா ஸ்டாலினிடம் 40,000 ரூபாயும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்த கார் கூட இல்லை
குறிப்பிடத்தக்க அம்சமாக, முதல்வர் ஸ்டாலின் பெயரில் எந்தவிதமான பைக், கார் உள்பட சொந்த வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.